Pages

Friday 5 June 2020

மொழிச்சூழல் இருக்க பயமேன்?

வணக்கம் நண்பர்களே,

     ஆங்கில மொழியைச் சரளமாகப் பேச விரும்புபவர்களுக்கு இடைவிடாத பேச்சு பயிற்சி என்பது இன்றியமையாதது.

     ஆரம்பத்தில் அவர்கள் சில வாக்கியங்களை மனப்பாடம் செய்தோ அல்லது யோசித்தோ பேசுவார்கள்.

   ஆனால் இங்கு ஓர் பிரச்சினையுள்ளது.

      பயிற்சியாளர் ஏதேனும் உச்சரிப்பிலோ,வாக்கிய அமைப்பிலோ தவறு செய்ய நேரும். அப்போது சிலர் அதை பெரிய பிழையாக சுட்டிக்காட்டலாம். இதைக் கண்டு பயிற்சியாளர் தளர்ச்சியுறக் கூடாது.

     அதனையோர் படிப்பினையாக ஏற்று, அத்தவறைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும்.

   இந்த நேரத்தில் நமக்கு உதவுவது மொழியைப் பேசும் சூழல்.


       உதாரணமாக, ஒரு தமிழ் நபர் வேலைக்காக வடநாடு சென்று அங்கு சிறிது காலம் தங்கினால் அந்த இடத்தில் பேசப்படும் மொழிச் சூழலில் அவர் ஈடுபடுகிறார்.


      இதையவர் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் இந்த மொழிச் சூழல் அவரை பாதிக்கும்..நாளடைவில் அவரது மனதில் அந்த மொழியின் நடைமுறைப் பேச்சு வழக்கு பதிய தொடங்கிவிடும்.

       இப்படி அந்த நபரிடம் ஊடுருவும் மொழி மெல்ல மெல்ல அவர் அதைப் பயன்படுத்துமாறு செய்விக்கும். இவ்வாறு பேசிப் பேசி அம்மொழி அந்த நபரிடம் சரளமாக விளையாடும்.

    இதெல்லாம் சாதாரண மக்களுக்கே நிகழும் என்பதால் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆங்கிலம் கற்பதிலும் இதையோர் முறையாக பயன்படுத்தலாம்.

         நன்றாக ஆங்கிலம் பேசும் மனிதர்களோடு நம்மை இணைத்துக்கொண்டு அவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்றவை ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கு உதவும்.

       இப்போது இதை சரியாக புரிந்து கொள்ள ஒரு நிகழ்வைக் காண்போம்.

       குழந்தையானது பிறந்தவுடனே பேசுமா? இல்லை பேசாது.

     வளர வளர தான் பேசும்.  இங்கு ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். அக்குழந்தை  நான்கைந்து வருடங்களில் தனது தாய்மொழியைச் சரளமாக பேசுகிறது.

        என்ன ஆச்சர்யம். அது எந்த இலக்கணத்தைக் கற்றுப் பேசுகிறது?

       ஏன் நாமே அவ்வாறு தானே வளர்ந்தோம்.

       ஆம். குழந்தை வளர வளர எந்த மொழிச் சூழலிலுள்ளதோ அம்மொழியைக் குழந்தை நன்றாகப் பேசத் தொடங்கிவிடுகிறது.

          இதே முறையைத் தான் ஆங்கிலம் சரளமாக பேசவும் நாம் பின்பற்ற வேண்டும். இலக்கணத்தை இங்கு கொண்டு வரக் கூடாது.


             இலக்கணம் மொழியை ஆராய்வது.  ஒரு பொருளை இன்னதென்று அறிந்த பிறகு தான் ஆராய வேண்டும்.


             இங்கு நமது தேவையை நாம் உணர வேண்டும்.


           மொழியை ஆராய்வதா அல்லது சரளமாக பேசுவதா?

           சரளமாக பேசுவது என்றால் இலக்கணத்தை கற்கத் தேவையில்லை.


           ஆம். இன்று நம்மிடையே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் பலருக்கு அதன் அடிப்படை இலக்கணம் கூட தெரியாது என்பது தான் உண்மை.

        ஆகவே பள்ளிகளில், மாணவர்களை ஆங்கிலத்தில் உரையாட வைப்பது இந்த மொழிச் சூழலை உருவாக்கத்தான்.


                பலர் இதிலென்ன இருக்கிறது என நினைக்கலாம் ஆனால் இந்த செயல்பாடு ஆங்கிலத்தை சரளமாகப் பேசுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

         இதனையுணர்ந்து நாம் நம்மை மொழியின் ஹாட்ஸ்பாட்டில் இணைத்து, பேசி பயன் பெறுவோமாக.



           

16 comments:

  1. Nice informative post...whether it's correct or not we have to speak then only we can develop our commn skill...

    ReplyDelete
    Replies
    1. Thank you. Language speaking atmosphere is important as well

      Delete
  2. மொழியைப் பேசும் சூழல் பற்றி சொன்னதும் 2018 ல நான் தாய்லாந்து  போனப்போ எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் ஞாபகத்துக்கு வருது.
    எங்கள் குழுவில் என்னை சேர்த்து ஏழு நபர்கள் இருந்தோம். அதில் நான் மட்டும்தான்  தென் இந்தியாவில் இருந்து. மற்றவர்கள் எல்லாம்  வட இந்தியர்கள்.
    அவர்களோடு பேச எனக்கு  ஹிந்தி தெரியாது. ஒரே வழி ஆங்கிலம் தான். முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும் 
    சரியோ தவறோ கிட்டதட்ட ஐந்து நாட்களுக்கு அவர்களோடு ஆங்கிலத்திலேயே பேச வேண்டி இருந்தது.
    அதனால் எனது யோசிக்கும் திறனும் ஆங்கிலத்திற்கு மாறி இருந்தது.
    வீடு திரும்பியதும் கூட   ஒரு சில நாட்களுக்கு யோசனை ஆங்கிலத்தில்தான் ஓடிட்டிருந்தது.
    போகக் போக அது குறைந்து இப்போ எல்லாம் அஞ்சு நிமிஷத்துக்கும் மேல தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுவேனா என்பது சந்தேகம்.
    ஆங்கிலம் கற்கலாம் வாங்க-
    தொடர் எல்லாருக்கும் பயன் உள்ளதா இருக்கு. தொடர்ந்து எழுது.

    ReplyDelete
  3. சிறப்பான வழிகாட்டல். பேசப் பேச தான் மொழி நம் வசப்படும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். தங்கள் ஊக்கத்தில் தொடர்கிறேன்

      Delete
  4. Nice guidance. i had the same experience when i was thrown in to loyola college english literature when i don't know english and had a lot of problems to sink with those english literary readers for first six months.

    ReplyDelete
  5. நன்றி அரவிந்த், தொடர்கிறேன்

    ReplyDelete
  6. நவீன் நல்ல பதிவு.

    மொழி என்பது சூழலில் பேச பேசத்தான் வசப்படும். ஆனா பாருங்க நான் பங்களூர் வந்து ஒன்றரை வருஷம் ஆகியும் இன்னும் கன்னடா சரளமாகப் பேச வரலை. இங்கு அருகில் பேசுவ்தற்கு ஆள் இல்லை அவர்கள் பேசும் கன்னடம் ஹிந்தி தெலுங்கு கலந்து இருக்கிறது. கூகுளில் பார்த்துக் கற்றுக் கொண்டு பட்லர் கன்னடம் தான் பேச வருகிறது ஹா ஹா ஹா

    பயிற்சியாளர் ஏதேனும் உச்சரிப்பிலோ,வாக்கிய அமைப்பிலோ தவறு செய்ய நேரும். அப்போது சிலர் அதை பெரிய பிழையாக சுட்டிக்காட்டலாம். இதைக் கண்டு பயிற்சியாளர் தளர்ச்சியுறக் கூடாது.//

    நவீன், பயிற்சியாளர் என்றால் பயிற்சி கொடுப்பவர் இல்லையா? நீங்கள் பயிற்சி பெறுபவர்களை அல்லது பேசுவதில் பயிற்சி செய்பவர்களைக் குறிப்பிட நினைத்து பயிற்சியாளர் என்று சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பயிற்சி செய்பவர் பயிற்சியாளர் என‌ நான் கொண்டிருக்கிறேன் மேடம். தவறா?

      Delete
    2. இல்லை நவீன் பயிற்சியாளர் என்பவர் கற்றுக் கொடுத்து வழி நடத்துபவர்.

      கீதா

      Delete
    3. சரி மேடம் திருத்திக் கொள்கிறேன்.

      Delete
  7. சிறப்பான ஆலோசனை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  8. informative post. my best wishes. thodarnthu publish pannunga.

    ReplyDelete