Pages

Wednesday, 20 May 2020

என்னைப் பற்றி

நமஸ்காரம் நண்பர்களே, எனது பெயர் நவீன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான். எனது பெற்றோர்களுக்கு நான் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்துப்பிறந்ததால் எனது வாழ்க்கை சுகமாகவும்,ஆனந்தத்தோடும் இருக்கிறது...படித்தது கான்வென்ட் என்பதால் ஆங்கிலம் மட்டும் கைகொடுத்தது.
எந்த பிறவியில் செய்த புண்ணியமோ. மொழிப்பாடங்களைத்தவிர மற்ற பாடங்களில் நான் தேர்ச்சி பெற எனது பெற்றோர்கள் வேண்டாத தெய்வமில்லை...ஆசிரியர்கள் கையாளாத யுக்திகளில்லை. என்னால் மொழிப்பாட ஆசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் எப்போதும் சண்டை தான்.மொழிப்பாட ஆசிரியர்கள் எனக்காக பேசுவார்கள்.பத்தாம் வகுப்பில், பொது தேர்வுக்கு முதல் நாள் இரவு என்னை பள்ளியிலேயே தங்கவைத்து விட்டார்கள்.பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் என்னை நேரில் சந்தித்து காலில் விழாத குறையாக பள்ளியின் மானத்தை காப்பாற்றும் படி கேட்டனர் என்றால் எனது சாமர்த்யத்தை கணித்துக்கொள்ளுங்கள்.ஒருவழியாக கணிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.பின், பன்னிரெண்டாம் வகுப்பில் மீண்டும் கணக்கிடம் சிக்கிக் கொண்டேன்
நான் படித்த நாட்களில்,1200 மொத்த மதிப்பெண்கள். ஆனால் எனது நிலை என்பது இயற்பியல்,வேதியலை பொருத்தவரை 50 செய்முறை தேர்வு மதிப்பெண்கள்...150 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு. ஆகமொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 50 மதிப்பெண்கள் செய்முறை தேர்வில் கிட்டிவிடும் எழுத்துத் தேர்வில் 20 மதிப்பெண்கள் எடுத்தால் நான் தேர்ச்சி பெறுவேன் என்பது தான்.எனவே அறிவியல் ஆசிரியர்கள் என்னை அவ்வளவு சிரமப்படுத்தியதில்லை.ஆனால் கணிதத்திலேது செய்முறைத் தேர்வு 70 மதிப்பெண்களை நானே தான் முயன்று பெற வேண்டும். கணக்காசிரியர் எனக்களித்த குறுக்குவழி...ஒரு மதிப்பெண் வினாக்கள்...முப்பது கேள்விகள் புத்தகத்திலிருந்து கேட்கப்படுமாம்.எனவே இரண்டு மாதங்களுக்கு அந்த ஓர் மதிப்பெண் வினாக்களுக்கு என்னை தயார் செய்தார்.பின் இரண்டே இரண்டு கணக்கு மாதிரிகளை மட்டும் எனக்கு கற்றுக்கொடுத்தார். நான் அவற்றை மட்டும் பயிற்சி செய்தேன்.அவ்வாண்டு, கணித பொதுத்தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக வந்தது.ஆனால் ஆண்டவன் கருணையால் அரசே அதிக மதிப்பெண் வழங்கி தேர்ச்சி விகிதத்தை கூட்ட உத்தரவிட்டதால் நானும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பின், வீட்டில் அனைவரும் பொறியியல் படிப்பில் சேர வற்புறுத்தினாலும் நான் கணிதமல்லாத துறையை தேர்வு செய்ய திட்டமிட்டேன். P.S.G கலையறிவியல் கல்லூரியில் நுழைந்தேன்.கணிதமல்லாத துறையை தேடினேன்...கிடைத்தது ஆங்கில இலக்கியம்.அதை தேர்வு செய்தேன். சேர்ந்தேன். மூன்று வருடங்கள் பயின்றேன். எனது ஆங்கில பின்புலம் எனக்கு பலமாய் அமைந்தது. நிறைய புதிய அனுபவங்களைப் பெற்றேன். பின் ஆங்கில துறையிலேயே முதுகலை பட்டம் பயில திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தை நோக்கி எனது பயணம் தொடர்ந்தது.  2013-15 இல் முதுகலை முடித்து பின் கோவையை அடைந்து இளங்கலை கல்வியியல்
பட்டம் பயின்றேன். எனது துரதிஷ்டம் பி.எட் படிப்பின் காலம் இரண்டாண்டுகளாக நீட்டிக்கப்பட்டது... வேறுவழியில்லாமல் பயின்றேன்.தற்போது ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறேன். நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியதால், ஓர் தேடல் நிறைந்த எழுத்துப் பயணத்தை தொடர இருக்கிறேன்.

23 comments:

  1. வணக்கம் திரு. நவீன் ஹரி
    தங்களது மனதில் பட்டதை தைரியமாக எழுதுங்கள்.

    சங்கோஜப்பட வேண்டாம் எழுத, எழுதவே எழுத்துகள் வசப்படும். தங்களது எண்ணங்கள் தொடர்ந்து வரட்டும் வாசிக்க காத்திருக்கிறேன்...

    குறிப்பு - எழுத்துகளை பத்தி பிரித்து போடுங்கள் வாழ்க வளமுடன்.
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் தாங்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு பத்திபிரித்து போடுகிறேன் சார்

      Delete
  2. வாழ்த்துக்கள் நவீன். உனது பலம் மொழி என்பதை திரு ஜீவா அவர்களின் ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் முழுமையாக வெற்றிகரமாக மொழிப்பெயர்த்ததின் மூலம் அறிவோம். வளர்க, வெல்க.
    சரியாக கணக்கு போடுவதை விட சரியாக கணக்கு பண்ணினதைப் பற்றியும் சில பதிவுகளை எழுது. இந்த வால் பையன் திருப்பதி தம்பி மென்று முழுங்கி எழுதுறான்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சகோதரரே... எழுதுகிறேன் விரைவில்

      Delete
    2. அரவிந்த் இப்படிப் போட்டு வாங்குறீங்களே பாவம் சின்னப் புள்ள பொழச்சுப் போட்டும். பப்ளிக்கா வேண்டாம் ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. மேடம், வயதில் நான் சின்னவன் தான் ஆனால் உருவத்தில் எருமகிடா மாதிரியிருப்பேன். என்னை பார்த்தவர்கள் யாரும் வயதில் சின்னவனாக என்னை கருதியதில்லை.மேலும் என்னை பெரியவரே,ஐயா என்றுதான் அழைப்பார்கள்..தங்களின் வார்த்தை சற்று ஆறுதலளிக்கிறது நான் பிஞ்சிலயே பழுத்த பழம்

      Delete
  3. நண்பரே ,உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.அது போல தான் எழுத்தும்.தொடர்ந்து எழுதுங்கள் , உங்கள் படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. நவீன் முதலில் எங்கள் வாழ்த்துகள் வலைத்தளம் தொடங்கியமைக்கு. நிறைய எழுதுங்கள்! நல்ல திறமை இருக்கிறது உங்களுக்கு

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் திருமதி.கீதா மேடம்

      Delete
    2. சார் தற்போது மாவு மில்லில் மிளகாய் தூள் அரைக்க வந்து நின்று தும்மல் வராத குறையாக பதிலளிக்கிறேன்...நான் என்ன செய்வேன் ஒரு சாமானியன்.

      Delete
  5. திரு நவீன் ஹரி உங்களைப் பற்றிய விவரணத்திலேயே எளிமை, இனிமை, ஆழம் எல்லாம் இருக்கிறதே. உங்கள் அனுபவங்கள், நீங்கள் கேட்டவை, கண்டவை, வாசித்தவை அவற்றைப் பற்றிய உங்கள் கருத்துகள் இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் கருத்திடுகிறோம். வாழ்த்துகள்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.தங்களை போன்ற ஆசான்களின் வழிகாட்டுதலில் இந்த பயணம் தொடரவேண்டும் சார்.

      Delete
  6. நவீன் அறிமுகமே அசத்தல். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. உங்க எழுத்துத் திறமை பளிச்! ரொம்ப நல்லா எழுத வருது. ஸோ நிறைய எழுதுங்க. வாழ்த்துகள்.

    சில சஜஷன்ஸ். கில்லர்ஜி சொல்லியிருப்பது போல் பத்தி பிரிச்சு போடுங்க.

    வரிகளை ஜஸ்டிஃபை பண்ணிப் போடுங்க. ஸோ தட் வலப்புற மார்ஜினும் ஒரே போல இருக்கும்.

    ஃபால்லோ பை இமெயில் காட்கெட் சேர்த்துடுங்க.

    கீதா

    ReplyDelete
  7. welcome to bloggers world naveen. we are waiting to read your blogg.

    ReplyDelete
  8. அன்புள்ள நவின், மஹேஷ் ுங்கலப் பத்தி நெரய சொல்லி ிருக்காரு. ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க எழுத வந்தது. ுங்க எழுத்து ரொம்ப அழகாகவும் எளிமையாவும் ிருக்கு. தொடர்ந்து எழுதுங்க காத்திருக்கிரோம்.

    ReplyDelete
    Replies
    1. Thank you Mr.fernandes..your inspiration triggers me a lot to write more.

      Delete
  9. Congrats brother...good start...The expert in anything was once a beginner...so try your level best...all the best for your future progress...eagerly waiting

    ReplyDelete
    Replies
    1. Thank you sister..I will write through your motivation and support

      Delete
  10. Good start, keep it up. Experienced writters like Mr.Thulasidharan, Mrs Geetha and Killerji will guide you if you want.

    wishing you all the very best.

    ReplyDelete