Pages

Monday, 25 May 2020

மாலை நேரத்தின் மயக்கத்திலே....

 வணக்கம் நண்பர்களே,
 
                  மாலை நான்கு அல்லது ஐந்து மணிக்குள்ளாக வகுப்புகள் முடிந்துவிடும். அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபின் அவை பூட்டப்படும்.


        வகுப்பில் பயிலும் அழகான பூக்களும் விலகிச் செல்லும்போது மனதிலோர் வெறுமை தோன்றும். மேலும் நானும் மகேஷும் எப்போதும் கைகோர்த்து நடப்போம். பார்ப்பவர்களுக்கு அனபான்டு போட்டு ஓட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம் வராத குறை.

       நாங்களிருவரும் எங்கள் ஆங்கில துறையிலிருந்து பிரதான சாலை வரை நடப்போம். நான் பல பெண்களை அப்போது பின் தொடர்ந்ததுமுண்டு.

         இதையுணர்ந்த மகேஷ் வேகமாக நடப்பான். அவனுடன் நானும் வேகமாக நடந்தாக வேண்டும் இல்லையேல் கீழே விழவேண்டும்.

              இவ்வளவு பெரியவுருவம் மண்ணில் சாய்ந்தால் நிலைமை என்ன வாகும். ஆகையால் எனக்கு மதம் பிடிக்கும் போதெல்லாம் எனது கையை
கில்லுவான்.பிரதான சாலையை அடைந்தவுடன் ஷேர் ஆட்டோவில் அவனை ஏற்றிவிடுவேன்.
 
               அதன்பின், நான் விடுதிக்கு வந்து ஓர் குளியல் போட்டுவிட்டு ஊர்சுற்றக் கிளம்பி விடுவேன். காதில் இயர் போனை மாற்றிக் கொண்டு மாலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவேன்.

         முதலில், பாலாஜி காலனி. இங்குதான் பல கடைகள் இருக்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு வழி எங்கிலும் இருப்பர். உணவகங்கள் நிரம்பி வழியும்.


          வேங்கடேஷ் நாயக் எதையோ வாங்கி விட்டு எதிரில் வந்தான். அவனும் என்னைக் கண்டு அழைத்தான். நான் காது கேட்டும் கேட்காதவன் போல் கடந்து சென்றுவிட்டேன்.

         பின் அன்றிரவு விடுதியில் உணவருந்தச்சென்ற போது, நாயக் என்னிடம் வந்து அமர்ந்தான். அன்று மாலை பாலாஜி காலனியில், அவன் என்னை அழைத்ததாகச்  சொன்னான்.

         நான் எதுவும் அறியாதது போல் "அப்படியா?"என்று கேட்டு இயர் போனைக் காரணம் காட்டிவிட்டேன்.

               அதற்கு பின் அவன் கூறியது என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அவன் சொன்னான்," I bought two packets of popcorn and I want to give you one that's why I called you in the evening" என்றான்.

              இதைக் கேட்டு நான் வருந்தினேன். அன்றிரவு, கனவில் பாப்கார்ன் தான் வந்தது. அடுத்தநாள் மாலை வரை காத்திருந்து முதல் வேலையாக
பாப்கார்ன் வாங்கச் சென்றேன். அங்கேயே வாங்கி அங்கேயே தின்றுவிட்டேன். நடக்க ஆரம்பித்தேன்.

         தண்ணீர் தாகம் எடுத்தது. வழியில் நீர் குடிக்க வழியில்லை.தொடர்ந்து விக்கல் எடுத்தது. மகேஷ் இல்லத்திற்கு சென்றேன்.அங்கு மகேஷின் அறையில் நுழைந்ததும் அவன் எப்போதும் வாட்டர் பாட்டிலில் சில்லுன்னு வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ் நீரை கபக் கபக் கென குடித்தேன்..


        தாகத்தின் தீவிரத்தால் பல் கூச்சம் கூட நான் நீரைப் பருக தடையாகவில்லை. ஏன் இப்படி விக்குகிறது என மகேஷ் கேட்க, நான் பாப்கார்ன் விஷயத்தை மறைத்து , விடுதியிலிருந்து வரும் போது நீரருந்தவில்லை எனவே தொண்டை வறண்டு விட்டது என கூறினேன்.


         மகேஷ், மும்முரமாக கணினியில் அமர்ந்திருந்தான். மகேஷின் பாட்டிக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது...'வந்துட்டான் நாலு பிள்ளைகளுக்கு அப்பன் மாதிரி'என தெலுங்கில் திட்டுவார்.

      இதை மகேஷ் நன்கு அறிந்திருந்தான்.ஆகவே நான் வந்தால் அறையின் கதவு மூடப்படும். அறையில், சில நேரம் பாடங்களை விவாதிப்போம். பின் பல விசயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.

       அப்போது, மகேஷின் அம்மா டீ கொண்டுவருவார்கள்.


         தவறு. மகேஷின் டீ டைமை நானறிந்து, சரியாக அந்த சமயத்தில் அவனுடன் இருப்பேன்.. ஆகையால் எனக்கும் டீ, ஸ்நாக்ஸ் கிடைக்கும்.
 
         அதுவும் தினமொரு வகை ஸ்னாக்ஸ். பஜ்ஜி, முறுக்கு, கடலை என ஏகபோகம் தான். மகேஷ் சாப்பிட்டு முடிப்பதற்குள், நான் எனது தட்டை காலி செய்துவிட்டு அவன் தட்டில் கை வைப்பேன்.

          இதையாரம்பத்தில், அவன் கண்டு கொள்ளவில்லை.

          ஆனால் ஒரு நாள், எங்களுக்கு பிஸ்கட் பேகட் வழங்கப்பட்டது. அவன் இரண்டு பிஸ்கட் சாப்பிடுவதற்குள், நான் பழக்க தோசத்தில் பேகட்டையே காலி செய்துவிட்டு மீண்டும் அவனிடம் மெதுவாக காதில்," சுட சுட ப்ரூ காபி கிடைக்குமா?" எனக்கேட்டேன். அவ்வளவு தான் அவன் மூச்சில் வேகம் தெரிந்தது. அமைதியானேன்.

        என்ன ஆச்சர்யம். மகேஷின் அம்மா நான் கேட்டபடியே ப்ரூ காஃபியை ஆவி பறக்க இருவருக்கும் கொண்டுவந்தார்.  நான் ஆனந்தமாக காஃபியை சுவைத்தேன்.


        பின் மகேஷ் இவனை இப்படியே விட்டால் இரவு உணவையும் இங்கேயே முடிக்கத் திட்டமிடுவான் என எண்ணி என்னை ஏதோ காரணம் சொல்லி வீட்டை விட்டு கிளப்பிவிட்டான்.


        அப்போது மணி ஏழு, நான் நடந்து சென்று கோவிந்தராஜ பெருமாள் கோவிலை ஒரு ப்ரதக்ஷணம் செய்து பின் காந்தி ரோட்டையடைந்து மீண்டும் நேரமிருந்ததால் கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தையும் ஓர் ப்ரதக்ஷணம் செய்துவிட்டு விடுதிற்கு இரவு உணவுக்காக திரும்பிவிட்டேன்.

          இரவு உணவிற்குப் பின், தென்றல் காற்றில் மிதந்தவாறு விடுதிக்கு சென்று ராமகிருஷ்ணய்யாவுடன் கூடிய நண்பர்களுடன் சற்று நேரம் உரையாடி விட்டு படுக்கைக்கு செல்வேன்.



        இவ்வாறாக, முதலாமாண்டில், எனது மாலை நேரப் பொழுது போனது.






     





   


             

13 comments:

  1. சுவாரஸ்யமான நினைவுகள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஐயா....

      Delete
  2. Replies
    1. I had all the popcorn sister. If you want can give but I can send only verbal popcorn..and that is cost effective too..

      Delete
  3. சாப்பாட்டுராமன் என்ற சொல்லாடல் சாப்பாட்டு நவீன் என மாறிவிடும் போல. இனிய நினைவுகள். பாப்கார்ன் எனக்கும் மிகவும் பிடிக்கும். தியேட்டரில் படம் மொக்கையா இருந்தா முழு லார்ஜ் பாப்கார்னையும் காலி செய்துவிடுவேன். அலுவலக நன்பன் அரிவழகன் எனக்காக சத்தியம் தியேட்டரில் நிறைய மஸாலா கலந்து குடுப்பான்.

    ReplyDelete
    Replies
    1. இப்படியாவது என் பெயர் காலம் கடந்து வழக்கில் இருந்தால் நான் பிறந்ததில் ஓர் அர்த்தம் கிடைக்கும். இலவசமாக கிடைச்சா பூந்து விளையாட வேண்டியது தான்...பாப்காணைச் சொன்னேன்.

      Delete
  4. Replies
    1. ஒப்பனையில் இருக்கிறார் வருவார்..பொறுமை.

      Delete
  5. மூச்சில் ொரு வேகம் தெரிந்தது, நல்ல வேளை கைய்யில் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கையிலும் சில நேரம் தெரிந்தது.

      Delete
  6. உங்கள் அனுபவங்களை மிகுந்த நகைச்சுவையுடன் சொல்வது வெகு இன்ட்ரெஸ்டிங்க்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்த நாட்கள் அவை.எனவே சரளமாக வருகிறது.நன்றி
      துளசிதரன் சார், கீதா மேடம்

      Delete
  7. பாப்கார்ன் என்பது பகல்கொள்ளை.

    ReplyDelete