வணக்கம் நண்பர்களே,
முதுகலை வகுப்புகளை காலை பத்து மணிக்கு சரியாக தொடங்கிவிடுவார்கள். மாணவர்கள் சாரை சாரையாக ஊர்ந்து வந்து கொண்டிருப்பர்.
அனைவரும் தங்கள் கைகளில் புத்தகங்கள் மற்றும் கையேடுகளை கொண்டு செல்வர்.
முதல் நாளிலிருந்து நான் மிகுந்த ஆர்வத்துடன் ஃபுல் கை சட்டையும்,பேண்டும் அணிந்து ஒரு பேராசிரியரை போல் செல்வேன். வகுப்புக்களை நன்கு கவனிக்க தொடங்கினேன்.
நாளடைவில், அந்த வகுப்புகளின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நானும் எனது இளங்கலை மாணவ பாணியை உதறினேன்.அந்த மாணவர்களோடு இணைய ஆரம்பித்தேன். இது பல மாற்றங்களை என்னுள் கொண்டுவந்தது. டீ சர்ட் அணிந்து வகுப்புக்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
இன்னும் பல மாற்றங்கள்.
அனைவரும் தங்கள் கைகளில் புத்தகங்கள் மற்றும் கையேடுகளை கொண்டு செல்லும் போது நான் மட்டும் வித்தியாசமாக கையில் தட்டும்,டம்ளருமாக செல்வேன். காரணம் உணவுக்கூடமானது எனது கல்லூரி அருகே அமைந்திருந்தது. எனது கல்லூரியிலிருந்து விடுதிக்கு இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.மதிய வெய்யிலில் அவ்வளவு தூரம் நடக்கவியலாது.எனவே தட்டையும் டம்லரையும் என்னுடன் எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு வருவேன்.தங்களது சொகுசு கார்களில் கல்லூரிக்கு வரும் பேராசிரியர்கள் வழியில் எனது இந்த காட்சியைக் தங்கள் கார் கண்ணாடியின் வாயிலாக பார்த்து நகைத்துச் செல்வர் போல தோணும்.
பேராசிரியர்களுக்கு வணக்கம் சொல்லும் போது ஒரு கையில் தட்டும் மறு கையில் டம்ளரும் இணைந்து ஓர் ஓசையை ஏற்படுத்தும்.
அது அவர்களையே சிரிக்க வைத்துவிடும்.
வகுப்பில் அனைவரும் வந்து சேர்ந்து தத்தமது இடங்களில் அமருவதற்கு சற்று நேரம் பிடித்தாலும். வகுப்புகள் தொடங்கி விடும்.
விடுதி மாணவர்களே கால தாமதமாக வருவார்கள். சிலர் அதுவுமில்லை.
வகுப்புத் தொடங்கிய சில நிமிடங்களில் ஓர் அமைதி ஏற்படும்.
நான் மிஞ்சிப் போனால் ஒரு பதினைந்து நிமிடங்கள் தான் வகுப்பை கவனிப்பேன். மீதி இருபத்தி ஐந்து நிமிடங்கள் ஜாலிதான்.
முதல் வரிசையில், மகேஷ் மற்றும் வேங்கடேஷ் நாயக் அமர்ந்திருப்பார்கள்.அவர்கள் ஆர்வமாக வகுப்புகளைக் கவனிப்பார்கள்.காரணம் அவர்களுக்கு அவையனைத்தும் புதிதாக இருந்தது. அவர்கள் இளங்கலை யில் வேறு பாடங்களைப் பயின்றவர்களாக இருந்தனர்.
நான் இளங்கலையிலும் ஆங்கில இலக்கியம் கற்றதனால் எனக்கு பேராசிரியர் எடுக்கும் பாடத்தில் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் இருந்தது.
ஒருமுறை நான் வகுப்பில் சிரித்துக் கொண்டும், பின் வரிசையில் அமர்ந்து நண்பர் திருமலய்யாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.
இதை கவனித்த பேராசிரியர், என்னை அழைத்தார்.
நானும் எழுந்து நின்றேன். அவர் என்னை அவமானப் படுத்த எண்ணி
என்னிடம் அப்போது நடத்திய பாடத்திலிருந்து கேள்விகணைகளைத் தொடுத்தார்.
நான் அப்பாடத்தை இளங்கலையிலேயே மிகவும் ஆழமாகக் கற்றிருந்ததால் நான் சற்றும் தளராமல் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.
வகுப்பில், அனைவரும் ஆச்சரியம் மேலிட என்னை பார்த்தனர்.
சில அரும்புகளும் என்னை உற்று நோக்கியதால் நான் ஆனந்தமடைந்தேன்.
பேராசிரியர் எவ்வளவு முயன்றும் என்னை மடக்கவியலவில்லை. ஆகவே, மாணவர்களிடம் தனது பெயரை காத்துக்கொள்ள வெரி குட் சொல்லி என்னை அமர வைத்தார்.
அவ்வகுப்பு முடிந்தபின், வேங்கடேஷ் நாயக் மற்றும் பிற ஆந்திர நண்பர்கள் என்னை பாராட்டினர்.
சில பூக்கள் என்னிடம் பேச விளைவதை என்னால் உணரமுடிந்தது.
உடனே, "இதற்குத் தானே ஆசைப் பட்டாய் ராஜகுமாரா நிமிடங்கள் எனக்குள்.
எப்படியோ வகுப்பில் முக்கியப் புள்ளியாகி விட்டோம் என்ற திருப்தியிலிருந்தேன்.
ஆனால், அப்போது கடப்பா சுப்பிரமணியம் என்னைப் பார்த்த பார்வையில் ஓர் விதமான எதிர்மறையர்த்தம் இருந்தது.
அடுத்த இரண்டு அமைதியான வகுப்புகளுக்குப் பிறகு மதியவுணவு இடைவேளை.மகேஷ் தனது டிப்பனை திறப்பான். சில பூக்களும் வகுப்பின் வலது பக்கத்தில் உணவருந்தி கொண்டிருப்பர். நான் மகேஷுக்கு கம்பனி கொடுப்பது போல் அந்த பூக்களின் நறுமணத்தை நுகர்வேன்.
அந்த பூக்களின் கூட்டத்தில் ஓர் செண்பக பூ.
அப்பூவின் முகத்தில் ஏனோ ஒரு தயக்கம்.
அந்த செண்பக பூவின் தயக்கத்தையறிய பல நாட்களை வீணடித்தேன்.
நாட்கள் உருண்டோடியது தான் மிச்சம் பூவின் தயக்கத்திற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள இயலவில்லை.பூவையும் நெருங்க இயலவில்லை.
இறுதியில் அப்பூவையே வகுப்பறையில் காணவில்லை.
பூவுக்கு ரெக்க மொளச்சுடுத்து! க்ளாஸ விட்டு பரந்து போயிடுத்து! நான் 9 வருடங்களுக்கு முன் அம்பத்தூர் ஓட்டியிலிருந்து ஆஃபீசுக்கு தனியாக போவும்போது இதே ஷென்பகப்பூ என்ன அப்பப்ப கூட்டிட்டு போகும். விவரமா என் ஸ்டிக்கத்தான் பிடிச்சு இழுத்துட்டு போகும்!
ReplyDeleteஇந்த பூ சற்று வித்தியாசமான பூ..எந்த ரக பூக்களோடும் ஒட்டாது..எப்போது தனித்திருக்கும்..
Deleteஎப்போதும் தனித்திருக்கும்.
Deleteஅரவிந்த்,
Deleteவகுப்பில் அந்த செண்பக பூ பசங்க கிட்ட நாலு வார்த்தை வாய் திறந்து பேசிச்சுனா அது
என் கிட்ட மட்டுமாத்தான் இருக்கும்.
உங்க செண்பக பூ விவரமா ஸ்டிக்கத்தான் பிடிச்சு இழுத்துட்டு போச்சு!
படுபாவி இந்த நவீன் செய்த சேஷ்ட்டைக்கு நான் பலியானேன்.
கடைசி வரைக்கும் கல்லூரி நாட்களில் நவீன் கையையே பிடிச்சிட்டு நடக்க வேண்டியதா போச்சு எனக்கு:((((
எல்லாம் அவன் செயல்...நான் என்ன செய்வேன்.
Deleteபூ காஞ்சி போகுமுன்னு தெரியும், ிப்பொல்லாம் காணாம கூட போகுதா? so so so sad!
ReplyDeleteஆம்...அதுக்கு காரணம் அந்த பூவை பெற்ற மரம் தான்
DeleteMahesh vaalkaiya keduthutiye pa . Poo raasika koodathu parithu vida vendum
ReplyDeleteமகேஷ் வாழ்க்கைய கெடுக்க நான் யார். அவன் கற்பனைக்கெல்லாம் நான் எப்படி காரணமாக முடியும்.உண்மையான காதலுக்கு ரசிக்கத்தான் தெரியும் பூவை பறிக்கக் தெரியாது.
ReplyDeleteநீ பரிக்கவில்லை. சென்னைக்கு வரவேண்டிய புயல் ஆந்திராவிர்க்கு திசை திரும்புவதுபோல. மஹேஷ் பக்கம் சாய்ந்துகொண்டிருந்த பூவை நீ திசை திருப்பிவிட்டுட்டாய்.
Deleteஅவர்களிருவரும் பேசுவதை மகேஷ் என்னிடம் கூறும் போது எனது உடல் தீயில் எரிவது போல் உணர்வேன்.ஆகையால் நானே களத்தில் இறங்கி பணி செய்தேன்.ஓரே நோக்கம் தான்.கிடைத்தால்எனக்கு கிடைக்கட்டும் ஆனால் மகேஷுக்கு மட்டும் கிடைக்கவே கூடாது. நான் தான் மகேஷின் இனிய நண்பன்.
Deleteஅரவிந்த்,
Deleteவகுப்பில் நாற்பத்து ஒன்பது மாணவர்களில் ஏழு மாணவர்கள் டே ஸ்காலர்ஸ். அதில் அஞ்சு பெண்களும், ரெண்டு பசங்களும் இருந்தோம். தினமும் லஞ்ச் ஹவர்
வந்தால் ஹாஸ்டல் பசங்க எல்லாம் ஹாஸ்டலில் சாப்பிட போய் விடுவார்கள். மீதி இருக்கும் ஏழு பேரில் கூட இருக்கும் அந்த பையனும் வீடு பக்கத்தில்
இருப்பதால் மதியம் எங்களுடன் சாப்பிட மாட்டான்.
மதியம் லஞ்ச் பெல் அடிச்சதும் டப்பாவை திறந்து நாங்க சாப்பிட்டு கொண்டே பேச ஆரம்பிப்போம். முதலாம் ஆண்டு முழுவதும் வகுப்பில் எடுத்த பாடத்திற்கு தொடர்பாக
ஷேக்ஸ்பியர், ஷெல்லி என எங்களது பேச்சு இருக்கும். இரண்டாம் ஆண்டில் வகுப்பு பாடங்களை தாண்டி சினிமா, சமந்தாவை பற்றி பேச
ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்குள்ளயே
நவீன் செய்த காரியத்துக்கு செண்பக பூ கல்லூரி முடியுற வரைக்கும் என்னிடம்
ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை:(((
so என் கவலைக்கு காரணமான இவனெல்லாம் ஒரு நண்பனா???
உன் மனசு தடுமாரி படிப்பு கெடக்கூடாது ன் உனக்கு நன்மையே செஞ்சிருக்கான்.
Deleteஆம் அரவிந்த்,
Delete'Blessing in disguise' எனக் கூறுவார்களே...
Mahesh and Naveen,Please stop fighting for Shenbakam flower, look for Jasmin or Rose and go forward if not found one already.
ReplyDeleteCollege life is a bundle of mixed experiences.
Interesting.
Thanks for your concern sir. Still trying to get atleast a paper flower
Deleteஇப்படி பக்கம் பக்கமா எழுதி. கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கிறதுக்கு பதிலா ஒரு பேப்பர்ல பூவே நீ யாருக்கு சொந்தம், பொன்வண்டுக்கா அல்லது கருவண்டுக்கானு எழுதி கொடுத்திருந்தா அந்த பூவுக்கு பதிலா இந்த ரெண்டு வண்டுகளும் கானாம போயிருக்கும். விதி யாரை விட்டது.
ReplyDeleteகருவண்டு என்று யாரை சொல்கிறார் அபிநயா? நவீன் note this point.
ReplyDeleteபூக்களுக்கு கருவண்டுகள் தான் பிடிக்கும் ஐய்யா. எனவே அதுவும் நல்லதிர்க்கே.
ReplyDelete