வணக்கம் நண்பர்களே,
நான் எனது ஆறாம் வகுப்பில் இருக்கும்போது மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்து வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு வீட்டிலேயே ஒரு மாத காலம் இருந்தேன்.
அது பள்ளி திறந்து முதல் மாதமான ஜுன் மாதம். எனது ஐந்தாம் வகுப்புத் தோழர்கள் நவீன் இனி வரப்போவதில்லை என நினைத்து விட்டார்கள்.
ஐந்தாம் வகுப்பில் வர்ஷா என்ற பொன்னு புது அட்மிஷன் ஆச்சு.ஐந்தாம் வகுப்பிலேயே நல்லா பழகிவிட்டோம். "Iam Varsha from Trivandrum" என அவளே தன்னை அறிமுகம் செய்துகொண்டு என்னோடு நட்பாக இருந்தாள்.
நாங்களிருவரும் க்ரூப் ஸ்டடிலாம் வகுப்பில் பண்ணுவோம். அவள் என் மண்டையில் நச்சென கொட்டுவாள்.
எனக்குத் தான் கணக்கு வராதே. கணித டீச்சர் சலோமி டீச்சர் என்னை வகுப்புத் தலைவர் ஸௌமியாவிடம் கணக்கு கத்துக்க சொன்னார். ஆனால் ஸௌமியா சலோமி டீச்சரிடம் நவீன் வர்ஷா கிட்டதான் படிப்பான் என சொல்ல, டீச்சர் வர்ஷாவின் வசம் என்னை ஒப்படைத்தார்.
ஏற்கனவே வர்ஷாவுக்கு எனக்கு அறிவியலை கற்றுத் தரும் பொறுப்பும் இருந்தது.
வர்ஷா தான் க்ரூப் லீடர். அவளிடம் என்னை தவிர மூன்று பேர் இருந்தனர்.ஆனால் அவள் என்மேல் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
இதை கண்டு பொறுக்காத மற்ற க்ரூப் ஆண் மாணவர்கள் டீச்சரிடம் போய் கம்புளைன்ட் பண்ணிட்டாங்க.
வர்ஷா நவீன மட்டும் தான் கேர் எடுத்துக்கறா எங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை என சலோமி டீச்சரிடம் கூறிவிட்டனர்.
டீச்சர் வர்ஷாவை தனியாக அழைத்து அவளிடம் இது பற்றி பேசியுள்ளார். அதற்கு அவள் நவீன் தான் ரொம்பா வீக்கா இருக்கான் அவனுக்கு தான் எக்ஸ்ட்ரா கேர் தேவ என டீச்சரிடம் கூறிவிட்டாளாம்.
பின், சலோமி டீச்சர் அவளிடம் இருந்த மற்ற மாணவர்களைப் பிரித்து விட்டு வர்ஷா முழுக்க முழுக்க என்னை கேர் எடுத்துக்க உத்தரவு போட்டாங்க.
இந்த உத்தரவு ஹாப் இயர்லி தேர்வுகளுக்கு முன்னால் போடப்பட்டது.
தேர்வுகள் எல்லாம் நடந்து,அதற்கு ப்ரிபேர் செய்வது என நாங்கள் இருவரும் பிஸியாகப் படித்தோம்.
இதே போல் ஐந்தாவது முழுக்க ஜாலியா இருந்தது. நானும் அறிவியல் மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
எனது படிப்பில் முன்னேற்றம் தெரிந்ததால் சலோமி டீச்சர் என்னை வர்ஷாவிடமே படிக்கச் சொல்லிவிட்டார்.
அவள் என்னை திட்டுவாள், அடிப்பாள் எல்லாம் செய்வாள். இன்டர்வெல்ல எனக்கு ஸ்னாக்ஸ் கூட குடுப்பா.
ஜாலியா இருந்தேன். படிக்கவும் செய்தேன்.
ஒருவழியாக, ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு தொடங்கியது. நான் கால் முறிந்து வீட்டில் இருந்த சமயத்தில் எவனோ ஒரு அயோக்கியன் வர்ஷா விடம் நவீன் இனிமே ஸ்கூல்கு வரமாட்டான் அவன் வேற ஸ்கூல்ல சேர்ந்துட்டான்னு சொல்லிட்டான்.
அவ அன்னிக்கு ஃபுல்லாக அழுத்துட்டே இருந்தாளாம். வகுப்புல காய்ச்சல் னு சொல்லி ரெஸ்ட் எடுத்தாளாம்.
வர்ஷாவிற்கு என்ன ஆச்சு என ஆறாம் வகுப்பிலும் எங்களுக்கு கணிதத்திற்கு வந்த சலோமி டீச்சர் மற்ற மாணவிகளிடம் விசாரிக்க சிந்து உண்மைய டீச்சர் கிட்ட சொல்லிவிட்டாள்.
பின், வர்ஷாவை தனியாக அழைத்து சலோமி டீச்சர் பேசுனாங்களாம்.
நவீனுக்கு கால் ஃப்ரேக்சர் ஆகியிருக்கு இன்னும் ஒரு வாரத்துல நவீன் ஸ்கூல்க்கு வந்துருவான் என அவளிடம் சமாதானம் கூறினார்களாம்.
ஒரு மாத ரெஸ்ட் முடிந்து நான் எனது மொழுக் மொழுக் உடலுடன் ஆறாம் வகுப்பிற்கு முதல் நாள் சென்றேன்.
காலில் கட்டுடன் என்னை கண்ட வர்ஷா அழுது விட்டாள். அதுவும் காலை தொங்க போடாமல் நீட்டி வைக்க மருத்துவரின் பரிந்துரையிருந்ததால் நான் வகுப்பில் காலை நீட்டித்தான் அமர்ந்திருப்பேன்.
வர்ஷா எனக்காக எல்லா வகுப்புச் செயல்களையும் செய்தால் எனது ரெக்கார்ட் கூட அவளே செய்தால்,
கிட்டதட்ட ஒன்றரை மாத நோட் வர்கை எல்லாம் அவளே செய்தால். ஆறாம் வகுப்பிலும் எனக்குத் துணையாக இருந்தாள்.
ஜுலை மாதம் எனக்கு கட்டு பிரித்து நான் பழையபடி நார்மலா பள்ளிக்கு வந்ததைக் கண்டு அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.
ஸ்கூல் கேன்டீன்னில் இருந்து எனக்கு பிஸ்கட், போன்டாலாம் வாங்கித் தந்தாள்.
ஆனால், நான் இப்போது போல அப்போதும் கஞ்சப் பயதான். அவளுக்கு ஒரு ஸ்னாக்ஸ் கூட கொடுத்ததில்லை.
அவளும் எதையும் எதிர்பார்க்கவில்லை.
எங்கள் பள்ளி ரொமன் கெதொளிக்கை சார்ந்த ஒன்று.எனவே அடிக்கடி பிரார்த்தனை கூட்டமானது பள்ளியின் அருகில் செயல்படும் தேவாலயத்தில் நடைபெறும்.
அப்போது வர்ஷா கொயர் குரூபில் இருந்தாள்.அவள் நன்றாகப் பாடுவாள். அதனால் அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வர்ஷா மலையாள ப்ராமின். ஆனால் அவளின் பாடும் திறமையால் அவளை கொயர் குழுவில் சேர்த்துக்கொண்டனர்.
அவளும் நன்றாகவே பாடினாள். பாடி முடித்து வகுப்பிற்கு வந்தவுடன் என்னிடம் தான் நன்றாக பாடினேனா என்ற சான்றிதழைக் கேட்டு நச்சரிப்பாள்.
பாடலை கவனிக்காமல் இருந்தாலும் அவளுக்காக நன்றாகப் பாடினாய் என கூறுவேன்.
இப்படி கூறுகையில் ஒருநாள் நீ நன்றாகப் பாடினாய் என வழக்கம் போல் பழக்கதோஷத்தில் சொல்லிவிட்டேன்.
அன்று பார்த்து அவள் கொயரில் பங்குபெறவேயில்லை என்பது எனக்கு தெரியவில்லை.
பிறகென்ன, வழக்கம் போல் தலையில் கொட்டு வாங்கினேன். ஆறாம் வகுப்பில் வர்ஷாவிடம் எனக்கிருந்த அன்பு மெதுவாகக் காதலாக மாறியது.
அவள் மேல் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். க்ரூப்பில் அமர்ந்து படிக்கும் போது அவளிடம் சில குறும்புகள் செய்ய ஆரம்பித்தேன்.
அவள் அதையும் பொருட்படுத்தாது, நீ இந்த முறை கணிதத்தில் பாஸ் ஆனால் உனக்கு பரிசு தருவேன் எனப் பாசத்தை கொட்டினாள்.
ஆறாம் வகுப்பு முழுத் தேர்வுகள் முடிந்து இறுதி நாளன்று நண்பர்கள் பிரியும் வேளையில் வர்ஷா என்னிடம் சரியாகப் பேசவில்லை.
நானும் சரி விடுமுறை முடிந்து பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை யிலிருந்தேன்.
விடுமுறை முடிந்து ஏழாம் வகுப்பிற்கு நான் வரும் போது நவீன் நவீன் என அன்போடு அழைக்கும் அந்த குரலைத் தேடினேன். கேட்கவில்லை.
ஏழாம் வகுப்பு முதல் நாளன்று காலை இடைவேளையில் தீபிகா வந்து என்னிடம் வர்ஷா வராததற்கான காரணத்தைக் கூறினாள்.
அந்த காரணம், வர்ஷாவின் அப்பாவிற்கு பணியிடமாற்றமானதால் வர்ஷாவின் குடும்பம் திருவனந்தபுரத்திற்கே சென்றுவிட்டார்கலாம்.
இதைக் கேட்டவுடன் இதயம் கணத்தது. ஏமாற்றத்தின் உச்சியில் இருந்தேன்.
வர்ஷா ஏதேனும் கூறினாளா என தீபிகாவிடம் கேட்டேன்.
அதற்கு அவள், வர்ஷா விசியத்தைக் தன்னிடம் கூறும்போது அழுததாகக் கூறினாள்.
எனக்கும் கண்களில் நீர் கோர்த்தது.
இடைவேளை முடிந்து வகுப்புத் தொடங்கியது.அடுத்த இரண்டு நாட்கள் மிகுந்த வருத்தமாக இருந்தது.
மூன்றாவது நாள் வந்தாலொரு ஆங்கிலோ-இந்தியன் தேவதை ஜோஸ்பின் அனிதா ரோடியஸ் என்று.
ஜாலிலா ஜும் கானா ஜான்சன்...
அப்புறம் என்ன.ஏழாம் வகுப்பில் நூறு சதவிகித வருகை பதிவிற்கு பரிசு பெற்றேன். நண்பர்களே.
விடுங்க பாஸ்.
ReplyDeleteதிரீஷா இல்லனா திவ்யா.
வர்ஷா இல்லனா ஜோஸ்பின் அனிதா ரோடியஸ்
தாவனி போனால் சல்வார் உள்ளதடா...மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ReplyDeleteநாம கணக்கு பாடம் கத்துக்குறது கடவுளுக்கே பொறுக்கள
ReplyDeleteகடவுள் இரக்கமற்றவர் போல.
DeleteYearly one new gf sema bro
ReplyDeleteவாங்க மேடம்,ரொம்ப நாளாக ஆளவே காணோம்
Deleteஅசராம பால் போடுறதுல கெட்டிக்காரன் நவீன் நீங்க. வர்ஷாதான் முதல் மழைமேகமா?
ReplyDeleteNo..no L.K.G la irunthu list iruku...Zenitha, Akshaya,Sruthi, menaka,priyadharshini etc..etc..
Deleteஇவ்வளவுதானா? மகேஷோட பட்டியல் இதைவ்இட பெருசு. எண்ணிக்கையே 40 வரும். உயிர் தோழன் உங்களுக்கு தெரியாதா நவீன்? எப்படி சொல்லாமவிட்டான்?
Deleteஏ நீ சும்மா இருக்க மாட்டியா அபி.
Deleteநானே மறந்து போன பெயர இவன் ஞாபகம் வெச்சிருக்கான்...
அடப்பாவி அஞ்சு வருஷமா என் கிட்ட நீ ஹரி ப்ரியாவ பத்தி புலம்புன இந்த வர்ஷாவ பத்தி
ReplyDeleteஒரு நாளும் வாயே திரக்கலியேடா?
டேய் மகேஷ். நீ மட்டும் ஹரி ப்ரியா 2 பத்தி சொன்னியா?
Deleteஅடடா! இந்த பயலுகளுக்குள்ள சண்ட மூட்டிவிட்டா புதஞ்சு கிடக்குர பல உண்ணைகள் பர்ஸ்டு ஆகி வெளிய கிளம்பும் போல! மூட்டிவிடுவோம்!
Deleteஐய்யைய்யோ, மைண்டு வாய்ஸ் பிளாண் அ கமெண்ட்டா டைப் பண்ணிட்டேனே?
அரவிந் சார் நீங்க நினைச்சதை நான் செஞ்சிட்டேன். கவலைப்படாதீங்க. நல்ல பொழுதுபோக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம்
Deleteஹாஹா... பல ரகசியங்கள் வெளியே வருகின்றனவே! நடத்துங்க....
ReplyDeleteஆம் சார்.மனதை தொட்ட தருணங்கள்
Deleteஆஹா... ஒரு கோஷ்டியாதான் அலையறாங்க போல....
ReplyDelete:))
எனது பசுமையான நினைவுகளை பகிர்ந்தேன் சார். அவ்வளவு தான்
Deleteஇப்படி இனிமையான ரகசியங்கள் நினைவில் இருந்து வருகின்றனவே.
ReplyDeleteதுளசிதரன்
எப்படி சார் மறக்க முடியும் அந்த மழை மேகத்தை.
Deleteஹா ஹா ஹா நவீன்! ஆட்டோக்ராஃப் போல போகுதே!!!
ReplyDelete//பாடலை கவனிக்காமல் இருந்தாலும் அவளுக்காக நன்றாகப் பாடினாய் என கூறுவேன்.//
இதை வாசித்ததும் கண்டிப்பா நவீன் வர்ஷாவிடம் மாட்டிக்கிட்டார்னு நினைச்சா அடுத்தது வந்திருச்சு!!!
இன்னும் பல ரகசியங்கள் வரும்னு தோணுது!! வரட்டும்..
கீதா
மேடம் ஆமா உண்மைதான். இன்னும் வரும்.
Delete