Pages

Tuesday, 9 June 2020

எனக்கு கணக்கு வராது


                       

    அப்போது 2010, நான் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த காலம்.
அப்போது எனக்கு கணிதத்தில் நான் நிச்சயம் தேர்ச்சி பெறப் போவதில்லை எனத் தோன்றியது. காரணம் அவ்வருடம் வந்த வினாத்தாள்.

  எனவே, கூலி வேலைக்காவது போய் பானை வயிற்றைக் கழுவிக் கொள்ளலாம் என எண்ணி வீட்டருகிலிருந்த ஓர் தொழிற்சாலைக்குச் சென்றேன்.

 அங்கு ஹெல்பர் வேலை கிடைத்தது. உழைப்பாளி பாட்டைப் பாடிக் கொண்டே எனக்கே உரிய தொள தொள ஆடையுடன் வேலைக்குச் சென்றேன்.

   தொழிற்சாலையில், பல ஊழியர்களுடன் உரையாடிக் கொண்டே வேலை செய்தேன். காலை பத்து மணிக்கு வேலைக்குச் சென்ற நான், பிசிரை அள்ளும் வேலையைச் செய்தேன்.

  சக ஊழியர்கள், என்னை மேலே படிக்கக் கூறி அறிவுரை வழங்கினர்.
நீங்கள் எப்படியோ பன்னன்டாவது வரை வந்துட்டீங்க, விடாம படிச்சிருங்கஎனக் கூறினார்கள்.

படிப்பின் மகிமை குறித்து அவர்கள் கூறினார்கள்.வெய்யிலில் தான் நிழலின் அருமை தெரியும்.

 காலை 11:30 மணியளவில் டீ, வடை வந்தது.

அரைமணி நேரம் இடைவேளை. வழக்கமாக பதினைந்து நிமிடம் தானாம். ஆனால் அன்று உரிமையாளர் இல்லாததால் அரைமணி நேரம் ஆனது.

   பின் எனக்கு ஒரு இரும்பு பெட்டிக்குப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது.



   குத்த வைத்துதமர்ந்து பெயிண்ட்டடித்தேன்.

மறுபடியும் இப்படியப்படியென ஒரு மணி நேரம் கழிந்து உணவு இடை வேளை வந்தது.

 வீட்டுக்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் தொழிற்சாலைக்குச் சென்றேன். அங்கு மேற்பார்வையாளர் என்னை அழைத்து பேசினார்.
அவர் என்னை வேலைகளைக் கற்றுக்கொள்ளுமாறு பணித்தார்.

  நான் எனது பெயிண்ட்டடிக்கும் வேலையை மாலை வரை தொடர்ந்தேன்.

மாலை ஐந்து மணி வரை வேலை செய்தேன். பின் வேலை முடியவே வீட்டுக்கு புறப்பட்டேன். வீட்டுக்கு வந்தால் ஒரே தலைவலி.அடுத்த நாள் வேலைக்குச் செல்லவில்லை.

  மறுநாள், அந்த தொழிற்சாலைக்குச் சென்று ஒரு நாள் வேலை செய்ததற்கு கூலி கேட்டேன். நூறு ரூபாய் கிடைத்தது.

  அதை வாங்கிக் கொண்டுநான் கடவுள்பட கேசட் வாங்க புறப்பட்டேன். போகும் வழியில்ஸ்ரீ பாண்டு ரங்க ருக்மிணி தியான மந்திர்என்னும் பெயர்ப்பலகை கண்களில் பட்டது.

   அங்கு சென்றேன். அது ஒரு கிருஷ்ணர் கோவில். ஒரு நபர் அமர்ந்திருந்தார்.அவருக்கு வயதாகியிருந்தது. ’ஸ்ரீமத் பாகவதம்படித்துக் கொண்டிருந்தார்.

அவர் என்னை பார்த்தவுடனேஹரே கிருஷ்ணாஎன்றார்.நானும்ஹரே கிருஷ்ணாஎன்றேன். அவரின் தூய சமஸ்கிருத உச்சரிப்பு என்னை ஈர்த்தது.

  அவரருகில் அமர்ந்தேன். பாகவதத்திலிருந்து கதைகளைச் சொன்னார்.இவ்வாறு எனது குருவை சந்தித்தேன். பத்து வருடங்களாக இந்த குரு சிஷ்ய உறவும் மாயோன் அருளால் தொடர்கிறது.


  




 





17 comments:

  1. ரொம்ப சந்தோசம். கணக்கு ரிசல்ட் என்ன ஆச்சி? அதை சொல்லலையே?

    ReplyDelete
  2. பதிவை வாசித்ததற்கு நன்றி சார்.ஆண்டவன் கருணையால் அரசே அதிக மதிப்பெண் வழங்கி தேர்ச்சி விகிதத்தை கூட்ட உத்தரவிட்டதால் நானும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

    ReplyDelete
  3. Oh my goodness...neenga +2 la fail aagi iruntha intha TAMILNADU oru nalla English teacher ah miss panni irukom...god's grace...

    ReplyDelete
    Replies
    1. Enna mathiri makkelaam English teacher ra la Tamil Nadu patapora paadu iruke.ada rama

      Delete
  4. Replies
    1. Kanakku varati paravailai.kanagambaram kidacha paravailai

      Delete
  5. நவீன்,

    மகேஷின் நண்பராக இருந்துகொண்டு "கணக்குப்பண்ண" வரவில்லை என்று சொல்வது வியப்பாக இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. சார் " கணக்குப் போடத் தெரியாது" ஆனா கணக்கு நல்லா பண்ணுவேன். மகேஷ் பயிற்சியளித்துள்ளான். ஆனால் அவனுக்கு மட்டும் எல்லாம் கிடைக்குது. எனக்கு கிடைப்பதே இல்லை.

      Delete
    2. மகேஷுக்கு எல்லாம் கிடைக்குதா?… அடப்பாவி அவன் இத பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லலையே.tips கூடவா தரவில்லை

      நீங்க கணக்கு பண்ண அழகு தெரிந்ததே உங்கள் "எதிர்வீட்டு சந்தேகம்" பதிவில் நல்லா பண்றீங்க போங்க.

      Delete
  6. கணக்குடனான உங்கள் பிணக்கு! :)

    சில பாடங்கள் நமக்குப் பிடிக்காது என்று முதலிலேயே முடிவு செய்து விடுகிறோம் - உங்களுக்குக் கணக்கென்றால் எனக்கு வரலாறு - எட்டிக்கசப்பு அதைக் கண்டால்! ஆனால் பிறகு வடிவேலு ”வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று சொன்னதைக் கேட்க எனக்கு பயங்கர சிரிப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..அதனால் தான் பயணகட்டுரைகள் எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      Delete
  7. நல்ல அணுபவப் பகிர்வு. அமையும் ஆசிரியர்கள் அந்த துறையின் மீதான ஈர்ப்பை இளமையில் தீர்மானிக்கிறார்கள். கணக்கு பண்ண முடிஞ்சா போதும் வரவா கணக்க பார்த்துகிடுவா.

    ReplyDelete
    Replies
    1. வர்றவ என் கணக்கை முடிக்காமல் இருந்தால் சரி

      Delete
  8. நவீன் எப்படியோ பாஸ் ஆகி இன்று நல்ல ஒரு ஆங்கில ஆசிரியராகப் பணி புரிகின்றீர்கள். நல்ல குரு கிடைத்ததிற்கு இது வழி கோலியதோ என்றும் தோன்றுகிறது.

    துளசிதரன்

    ஆஹா நீங்களும் நம்ம கேஸா ஹா ஹா ஹா நானும் அப்படிக் கஷ்டப்பட்டிருக்கேன் என் கணக்குப் பாடத்துல.

    பாருங்க உங்களுக்குக் கணக்கு வரலைனா என்ன வாழ்க்கைக் கணக்கு வேறு அந்தக் கணக்கு உங்களை எங்கு அழைத்துச் சென்றுள்ளது பாருங்க..

    உங்கள் எழுத்து ஏதோ ஒன்றைச் சொல்லுகிறது அதன் பின்னே...நல்லாருக்கு

    கீதா

    ReplyDelete
  9. நன்றி துளசிதரன் சார். தங்கள் வருகையே எனக்கு ஊக்கமளிக்கிறது.
    //நவீன் எப்படியோ பாஸ் ஆகி இன்று நல்ல ஒரு ஆங்கில ஆசிரியராகப் பணி புரிகின்றீர்கள்.// காலம் செய்த கோலம் சார்.

    மேடம், வாழ்க்கைக் கணக்கு. பகவானே, இங்கேயும் கணக்கா? நன்றி மேடம்

    ReplyDelete