வணக்கம் நண்பர்களே,
ஆங்கிலம் சரளமாகப் பேச அடிப்படையான சில விஷயங்களை பார்த்தோம். அந்த வரிசையில் அடுத்து வருவது சொற்களஞ்சியம்.
அதாவது ஆங்கிலத்தில் நமக்கு எவ்வளவு சொற்கள் தெரியும் என்பது தான் விஷயமே. மொழியை சரளமாக பேசுவதற்கு சொற்கள் அவசியம். ஆங்கில அகராதி இதற்கு பெருமளவு உதவி செய்யும்.
பலரும் ஆங்கில அகராதியை வைத்துள்ளனர் ஆனால் அதை பயன்படுத்தும் முறையில் தான் குழப்பமுள்ளது.
ஆங்கிலத்தை பொருத்தவரை அகராதி என்பது ஒரு Reference material.
எப்படி கணிதத்திற்கு log book என்பதோ அதே போல் தான் ஆங்கிலத்திற்கு அகராதி.
அதை மனப்பாடம் செய்ய நினைப்பது வீணான செயல்.
மாறாக, அதன் பயன்பாட்டையும், அதனை உபயோகப்படுத்தும் முறையையும் இங்கு காண்போம்.
ஆங்கில அகராதி என்பது ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியாக இருப்பது ஆங்கில மொழி கற்பவருக்கு உதவியாக இருக்கும்.
ஆங்கிலம்-பிறமொழி அகராதிகள் பெரும்பாலும் மொழிபெயர்பாளர்களால் பயன்படுத்தப்படுவதாகும்.
இதற்கு உதவுவது வாசிப்புப் பழக்கம்.
வாசிப்புப்பழக்கமுள்ளவர் தான் வாசிக்கும் புத்தகங்கள் அல்லது ஏதோவொரு சொல்லிற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் ஆங்கில-ஆங்கில அகராதியில் அந்த சொல்லைத் தேடி அதற்கான பொருளைப் பெறலாம்.
பொதுவாக ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கே பல வித அர்த்தங்கள் இருக்கும். உதாரணமாக, 'Reservations' என்னும் சொல்.இந்த சொல்லானது நாம் பொதுவாக அறிந்த முன்பதிவு என்ற அர்த்தத்தில் வரும் ஆனால் அதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு.
'Reservations' என்ற சொல் சந்தேகங்களையும் குறிக்கும்.இது போல் அனேக சொற்கள் ஆங்கில அகராதியில் உள்ளன.அந்த சொல்லிலுள்ள எல்லா அர்த்தங்களையும் பார்த்து விடவேண்டும்.அகராதியில் அந்த சொற்களின் பயன்பாட்டையும்(usage) பார்த்து விட வேண்டும்.
பின் அந்த சொல்லின் உச்சரிப்பை சரியாக கற்றுக்கொள்ள வேண்டும். அந்த சொல்லை மீண்டும் எங்காவது பயன்பாட்டில் காணும் போது அந்த சொல் மற்றும் அதன் பயன்பாடு நன்றாக மனதில் பதிந்துவிடும்.
இவ்வாறாக இச்செயல்பாடு தொடர, நிறைய சொற்களை கற்றுக்கொண்டு நமது சொல்லாற்றலைப் பெருக்கலாம். சொற்களின் அர்த்தங்களைச் சரிவர புரிந்துகொண்டு அதன் பயன்பாட்டையும் அறிந்து உபயோகிக்க வேண்டும்.
தற்போது உச்சரிப்பை மேம்படுத்த கணினி மிகுந்த உதவி செய்கிறது.
இதை பயன்படுத்தி நமது உச்சரிப்பை சரி செய்து கொள்ளலாம்.ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியைத் தான் பயன்படுத்த வேண்டும்.
தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தினமும் குறைந்தபட்சம் ஒரு சொல்லிற்காவது பொருள் தேட வேண்டிய சூழல் ஏற்படும். உடனே சமயத்தைப் பயன்படுத்தி ஆங்கில அகராதியை பிரட்டி அர்த்தம் அறிய வேண்டும்.
இப்படி செய்கையில் சில சொற்களுக்கு அர்த்தம் மறந்து போவது போல் தெரியும் ஆனால் அப்போது மனதைக் தளர விடாமல் மீண்டும் அச்சொல்லின் அர்த்தத்தை புரட்டி பார்த்து வலுவூட்டுவது நல்லது.
Reading habit paves way for rich vocabulary.
பொதுவாக, நாளிதழ் வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள் தினமும் புதிய சொற்களுக்கு அறிமுகமாவார்கள். இதனால் நிறைய ஆங்கில சொற்களை நாம் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.
மேலும், சொற்களின் ஆற்றலை பெருக்க Thesaurus பயன்படுத்தலாம். சொற்களின் சமமான அர்த்தங்கள் தரும் வேறு சொற்கள் இதிலிருக்கும் synonyms என்று கூட இவ்வகை சொற்களைக் கூறுவார்கள்.
இது பேச்சாளர்கள், கட்டுரையாளர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.
ஒரே சொல்லைப் பயன்படுத்துவதற்கு பதில் அதே அர்த்தம் தரும் பல சொற்களைப் பயன்படுத்துகையில் பேச்சின் ஆற்றல் சிறக்கும். கட்டுரைகளும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்த செயல்பாடுகளை முறைப்படி செயல்படுத்தினால் வெற்றி நிச்சியம்.
ஆனால் சிலர் ஆர்வ மிகுதியில் ஓர் அகராதியை வாங்கி இரண்டு மூன்று நாட்கள் அதை பயன்படுத்திப் பார்ப்பர். பயிற்சி முறை இல்லாததால் கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் தோன்றி நாளடைவில் பயிற்சியையே கைவிட்டு விடுவர்.
பேருந்தில் பயணிக்கும் போதோ, மருத்துவமனைகளில் அமர்ந்திருக்கும்போதோ அல்லது எங்கு வேண்டுமானாலும் நமக்கு புதுச் சொற்கள் கண்களில் படலாம்.
எனவே அச்சொற்களைக் கவனமாக பதிவு செய்து நமது ஆங்கிலம்-ஆங்கிலம் அகராதியில் பார்க்கலாம்.சொற்களஞ்சியத்தைப் பெருக்குவோம், சொற்களில் விளையாடுவோம்.
இறுதியாக, டாக்டர்.இராதகிருஷ்ணனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.அவர் ஒரு நாள் ஒரு கல்லூரியில் மாணவர்களைச் சந்தித்த போது வேண்டுமென்றே ஒரு மாணவன் ஒரு கேள்வியைக் கேட்டானாம்.
அக்கேள்வியானது," what is the difference between a school master and a station master?"
இந்த கேள்விக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் சற்றும் யோசிக்காமல் ஒரு சொல் விளையாட்டு விளையாடினாராம்.
அவரின் பதில்," A station master minds the train and a school master trains the mind" என்று கூற அங்கிருந்தவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினராம்.
இது போல் நாமும் சொற்களில் விளையாடுவோமா நண்பர்களே?
'ஆங்கிலம் கற்கலாம் வாங்க' தொடரில் இதற்கு முந்திய பதிவுகளைப் படிக்க:
நுனி நாக்கில் ஆங்கிலம்!
மொழிச்சூழல் இருக்க பயமேன்?
மொழித் திறன்
'ஆங்கிலம் கற்கலாம் வாங்க' தொடரில் இதற்கு முந்திய பதிவுகளைப் படிக்க:
நுனி நாக்கில் ஆங்கிலம்!
மொழிச்சூழல் இருக்க பயமேன்?
மொழித் திறன்
நல்ல வழிகாட்டுதல். பாராட்டுகள் நவீன் ஹரி.
ReplyDeletesuper Guidance. great examples. Awesome Flow. keep rocking bro.
ReplyDeleteThank you
Deleteமிகவும் நல்ல பதிவு. சிறப்பான கைடன்ஸ். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் சொல் விளையாட்டு அருமை.
ReplyDeleteமிகவும் அழகாகச் சொல்லி வருகிறீர்கள்
துளசிதரன்
மிக்க நன்றி சார்.தங்களுடைய கருத்து என்னை மேலும் வலுவூட்டுகிறது.
Deleteநவீன் ரொம்ப அழகா எழுதறீங்க. செம. சொற்களஞ்சியம்/வொக்காபுலரி ஆம் மிக மிக அவசியம்.
ReplyDeleteஎங்கள் பள்ளி நினைவுகள் வருகிறது. வீட்டில் மாமாவின் வழிகாட்டலும் நினைவுக்கு வருகிறது. இங்கு எழுதினால் பதிவாகிவிடும் அபாயம் ஹா ஹா அதனால் பதிவாகவே எழுதுகிறேன்.
நல்லாசிரியர்னு உங்களின் இப்படியான ஒவ்வொரு பதிவும் சொல்கிறது. வாழ்த்துகள் பாராட்டுகள்!
சூப்பர்.
கீதா
ஆம் மேடம்.படித்ததற்கு நன்றிகள் பல
Deleteஅருமையான பதிவு. சொல்விளையாட்டு சூப்பர். ரிசர்வேஷன்கு இன்னொரு அர்த்தம் எனக்கு புதிது அதை தெரியவைத்ததற்கு நன்றி நவீன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அபி
Deleteநல்லதொரு விளக்கம்... தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி சார்.மீண்டும் வருக
ReplyDeleteசரியாக சஒன்னாய்.
ReplyDeleteகல்லூரியில் ஆங்கிலம் கற்கும் வெறியில் நூலகத்தில் அகராதியை கரைத்துக் குடிக்கும் முட்டாள்தனம் செய்ய முயன்று பல்பு வாங்கினேன்.
பின் ராபின்சன் க்ரூஸோ போன்ற நாவல்கள் படித்தபோதுதான் உண்மை விளங்கியது.
பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு மேலும் ஒரு சவால்.
பதிவு செய்யப்பட்ட ஒலிப் புத்தகங்கள் கேட்டால் சொற்களஞ்சியம் பெருகினாலும் எழுத்துப்பிழைகள் இருக்கும் வார்த்தைகளை மட்டும் கேட்பதால்.
எனவே தான் இன்னும் என் தட்டச்சில் எக்கச்செக்க பிழைகள் இருக்கிறது.
அதை வெல்ல மின் நூல்கள் படிக்கும்போது spelling mistakes ஐயும் சந்திப்பிழைகளையும் சரி செய்துகொள்ளலாம் எழுத்து எழுத்தாக படிக்க முயல்வதால்.
அபியின் எழுத்துக்களில் பிழை குறைவாகவுள்ளது. அவர்களைக் கேட்டு தெரிந்து கொள்வோம்.
Deleteபார்த்தீங்களா நவீன் என்னை ஏன் வஞ்சப்புகழ்ச்சி செய்து வம்புக்கு இழுக்கிறீர்கள்? அந்த எழுத்துக்களை நானும் திருத்தியிருக்கிறேனே நிறைய இருக்கும். ஆனால் நான் சமீபத்தில் யூடியூபில் சந்திப்பிழையை சரி செய்வதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டேன்.
Deleteஅந்த யூட்யூபில் பார்த்த விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால் நல்லாயிருக்கும்.
Deleteஉன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றந. ஆங்கிலம் கற்கலாம் வாங்க தொடரில் இது எனது முதல் பதிவு. சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDelete