Wednesday 27 May 2020

நுனி நாக்கில் ஆங்கிலம்!



வணக்கம் நண்பர்களே,
                     ஆங்கிலம் நம் அனைவரின் மனதிலும் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பல தலைமுறைகளாக நம்மிடம் ஒட்டி உறவாடி கொண்டு சமுதாயத்தில் தனக்கென ஓர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

                  ஒரு மொழியைப் பற்றி அறிந்து கொள்ளும் முன் அந்த மொழியைப் பேசக் கூடிய மக்களைப் பற்றியும், அவர்கள் வாழும் பகுதியைப் பற்றியும் மொழியியல் அறிஞர்கள் ஆராயத்
தவறமாட்டார்கள் .

                     ஆனால் நாமோர் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.மொழியைக் கற்பதற்கும், மொழியைப் பற்றி கற்பதற்கும் வித்தியாசமுள்ளது.

       தற்போது மொழியைப் பற்றி கற்பதை விட மொழியை கற்பது மக்கள் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சரளமாக ஆங்கிலம் பேச மக்கள் மனமானது ஏங்குகிறது.

       குறிப்பாக படித்த இளம் தலைமுறையினரிடம் இந்த தவிப்பைக் காணமுடிகிறது. அதுவும் பெண்கள், ஓர் அழகான ஆண் மகன் தங்களை கடந்து போக நேர்ந்தாலோ அல்லது அவர்களை நோட்டமிட நேர்ந்தாலோ தாய்மொழியில் பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென ஆங்கிலத்தில் கொஞ்சுவார்கள். ஆண்களும் அப்படித்தான்.

      ஆஹா.. மொழி எதற்கெல்லாம் பயன்படுகிறது.

          இது  இயற்கையாக பலரிடம் உள்ள ஓர் எண்ணம்.


          ஓர் ஆங்கில ஆசிரியராக என்னை நான் வெளியுலகில் அறிமுகம் செய்தபின், " சார், சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி?" என்னை நோக்கிப் பாயும் கேள்வி அஸ்திரங்களுள் இதுதான் முதன்மையானது.

           பலரும் இந்த கேள்விக்கு தரும் வாடிக்கையான பதில்," நிறைய வாசியுங்கள் என்பதுதான். இதுவும் உண்மைதான். ஓர் மொழியில் ஆழ்ந்த புலமை பெற வாசிப்பு இன்றியமையாதவற்றுள் ஒன்றாகிறது.

            ஆனால், இந்த பதிலைப் பெறுபவரின் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் கேட்ட கேள்வி, ஆங்கில மொழியைச் சரளமாக பேசுவதைக்குக் குறித்ததாகும்.

        ஒருவேளை அந்த நபர் வாசிப்புப் பழக்கம் அல்லாதவராகக் இருக்கலாம் அல்லது நமது நாட்டிற்கே உரிய கிராமிய பின்னனியுள்ள நபராகக் கூட இருக்கலாம்.

         நபருக்கு நபர், ஆங்கிலம் கற்பதின் தேவையும் அதற்கேற்ற
 அணுகுமுறையும் மாறுபடும். அனைவருக்கும் ஆங்கில இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்றுக் கொடுத்தால் அவர்களால் சரளமாக ஆங்கிலம் பேசும் இலக்கு அடையப்படுமா என்பதை உறுதியாகத் கூற இயலாது.

         ஓர் மொழியை கற்கும் முன் அதனை அறிவு சார்ந்த பாடத்தைப்  போன்று அணுகாமல் திறன் சார்ந்த பாடமாக அணுகுதல் வேண்டும்.


         திறன் சார்ந்த பாடங்களுக்கு எடுத்துக்காட்டாவது,

  •   ஓவியம்
  • நடனம்
  • நீச்சல் முதலியன.
      அறிவு சார்ந்த பாடங்களுக்கு எடுத்துக்காட்டாவது,
     
  • அறிவியல்
  • வரலாறு
  • இலக்கியம் முதலியன.
         மொழியைக் சரளமாக பேசக்  கற்பதற்கும் இதை மனதில் கொள்வதவசியம்.

          எவ்வாறு, ஓவியத்தை பயிற்சியினால் சிறப்பாக வரைய இயலுமோ அதே போல் மொழியை சரளமாக பேசுவதும் பயிற்சியினால் தான் வரும்.

         சரி. அதென்ன பயிற்சி சார்?

            ஓவியத்தை வரைந்து முயற்சிப்பதைப் போல, ஆங்கிலத்தை சரளமாகப் பேச, பேசி பயிற்சி செய்ய வேண்டும். 

       ஆங்கிலத்தில்  பேச வேண்டுமா?

       ஆம். ஆங்கிலத்தில் பேச வேண்டும்.

       பிழையானால் அனைவரும் நகைப்பார்களே.
  
ஆனால் அதே நகைக்கும் நபர்கள் நீ சரளமாக ஆங்கிலம் பேசினால் விழிப்பார்களே.
      
                 நீச்சல் கற்க கிணற்றிலோ, நீச்சல் குளத்திலோ குதிக்கத்தான் வேண்டும்.
                  அதே போல் ஆங்கிலம் சரளமாக பேச, பேசத்தான் வேண்டும்
           ஆங்கிலத்தில் பேசுவது தான் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பயிற்சியே.

      சரி பேசலாம். யாரிடம் பேசுவது?


       அப்பாவிற்கு தமிழே தெளிவாக பேச வராது.

        அம்மாவிற்கு வீட்டு வேலைகளே கதி.
  
       அண்ணனுக்கு தனக்கு பேச வராதே என்ற குற்றவுணர்ச்சி.
  
கவலையை விடுங்கள். ஆங்கில ஆசிரியரிடமே பேசலாம் என்றாலும் எனக்கு பயம்.

       சரி யாரிடம் தான் பேசிப் பயிற்சி செய்வது?
    
     கவலையை விடுங்கள். கண்ணாடியிடம் பேசுங்கள்.
   
          அட முட்டாள்தனமாக இல்லை.
   
         இல்லை.. இது தான் ஒரே வழி. கூச்சத்தை, பயத்தைப் போக்குவதற்கு.

        நம்ம வீட்டு கண்ணாடியே கற்றல் உபகரணம்.
   
            அய்....ஜாலி....செலவே இல்லை..

             ஆம் நண்பர்களே...அனைவரும் இனி ஆங்கில மொழியை சரளமாக பேசுவோமாக. 




         

                      
    

16 comments:

  1. உண்மை. கூச்சத்தைப் போக்க முதலில் கண்ணாடியே துணை. பின் ஆசிரியர்களுடன்ம், நம்மை ஒத்த நன்பர்களுடனும் விளையாட்டாக பேச தொடங்கி சிரு கதைகளை தெரிந்த எளிய ஆங்கிலத்தில் சொல்லி பார்க்கலாம்.
    உண்மை. கூச்சத்தைப் போக்க, கண்ணாடி முன் முதலில் பேசலாம். பின், ஆசிரியர்களிடமும் நன்பர்களுடனும் சிருகச்சிருக பேசி பழகலாம். சிரு கதைகளை எளிய தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லி பழகலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந்த் தங்கள் கருத்துக்கு.

      Delete
  2. Thank you for your encouraging words surely I will follow your advice

    ReplyDelete
  3. Naveen Hari,

    This is the first blog of yours I went through; well presented and motivating, the flow of your Tamil is excellent.

    well-done, keep it up.

    Thanks to Thirupathi Mahesh, who introduced you and your blog to me and, I believe, must have mentioned about my blog to you.

    ReplyDelete
    Replies
    1. Thank you for spending your valuable time in reading my blog.Tirupati Mahesh has told me about your blog...I will read and comment on it.

      Delete
  4. மொழி - எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வேண்டும்! பேசுவதற்கு பயப்பட வேண்டியதே இல்லை - பேசப் பேச உங்களுக்கு மொழி வசப்படும்! சிறப்பான பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. "மொழி - எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வேண்டும்" உண்மை. நன்றி சார்

      Delete
  5. நவீன் நானும் ஓர் ஆங்கில ஆசிரியன் என்பதால் உங்கள் பதிவை ரசித்தேன். சரிதான் பேச பேசத்தான் வரும். நல்ல பதிவு.

    துளசிதரன்

    ஹை நவீன். ரொம்ப கரெக்ட் . மொழி கற்கும் ஆர்வம் வேண்டும். பேசி பேசிப் பழகினாதான் வரும். அழகா சொல்லிருக்கீங்க. கடைசில கண்ணாடி பார்த்து பேசுறது ம்ம்ம்ம் நம்மை கரெக்ட் செய்யனுமே!?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். மேடம்,"கடைசில கண்ணாடி பார்த்து பேசுறது ம்ம்ம்ம் நம்மை கரெக்ட் செய்யனுமே!?" புரியவில்லை.

      Delete
    2. Like Winston Churchill...nice information and good initiative bro...keep rocking...

      Delete
  6. அற்புதமான பதிவு. அழகான ஆலோசனைகல். "            ஆனால், இந்த பதிலைப் பெறுபவரின் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் கேட்ட கேள்வி, ஆங்கில மொழியைச் சரளமாக பேசுவதைக்குக் குறித்ததாகும்."
    Fact Fact.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எனது பதிவுகளையும் மதித்து,படித்து,மறுமொழி இடுவதற்கு எனது நன்றிகள் நண்பரே.

      Delete