Tuesday 26 May 2020

ஏனுங்க கொஞ்சம் கேளுங்க....நான் கோயம்புத்தூர் ஆளுங்க...


வணக்கம் நண்பர்களே,

                  என்னதான் திருப்பதியில் முதுகலைக்குச் சென்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கோவையில் தான். கோவையைப் பற்றி தமிழுலகிற்கு நான் கூறி புரிவதற்கு ஏதுமில்லை.
அனைவரும் நன்கறிவர் கோவையின் சிறப்புக்களை. எனவே, கோவைக்கும் எனக்குமுண்டான உறவை இக்கட்டுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

          கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர். எனது வாழ்க்கையில் ஓர் அற்புத பரிசென்றே சொல்ல வேண்டும்.மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் என் வாழ்க்கை இந்த நொடி வரை போய்க் கொண்டிருக்கிறது.

            எனது தந்தை ஓர் தொழிலாளி. அவர்தம் கடின உழைப்பால் தான் நான் இன்று வரை ஆனந்தமாக வாழ்ந்து வருகிறேன். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின் என் பெற்றோருக்கு நான் பிறந்தேன். எனது பிறப்பே ஓர் சாதனையாக அமைந்தது.

    திருமணமாகி பன்னிரெண்டு ஆண்டுகள் ஒரு பெண் குழந்தை பெறாமலிருந்தால் அவளை இந்த சமூகம் நிம்மதியாக வாழ விடுமா? இல்லை.

    என் அன்னைக்கும் அதே நிலைதான். வெளியில் செல்லவே அஞ்சுவார்களாம். அப்படி சென்றாலும் நெருங்கிய உறவினரே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இவளுக்கு எப்படி குழந்தை பிறக்கும் எனவும் அப்படியே பிறந்தாலும் ஆரோக்கியமாக பிறக்காது என்றெல்லாம் ஏசுவார்களாம்.


      இதனையெல்லாம் தாங்கிக் கொண்டு இறைவனே கதியென்றிருந்த என் தாய்க்கு ஒரு தை மாதம் நான் பிறந்தேனாம்.எனது வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் துன்பமானாலும் சரி இன்பமானலும் சரி அதை நான் என் அன்னையிடம் பகிர நான் தயங்கியதில்லை.

       என்ன ஒரே தற்பெருமையாகவுள்ளதே என நினைக்க வேண்டாம் நண்பர்களே. உண்மையைப் பதிவு செய்துள்ளேன். பதினோரு ஆண்டுகள் எனது தந்தை படுக்கையில் கை கால் வராமல் அவதியுற்றார். ஆனால் அப்போதும் வறுமையின் நிழல் கூட என் மேல் படாமல் என் அன்னை என்னை வளர்க்கிறார்கள்.

      எனது நகைச்சுவையான எழுத்திற்குப் பின்னால் ஒரு பெரிய துன்பம் இருக்கிறது.

     எனக்குத் தற்போது அறிவுரை வழங்க தந்தையின் ஸ்தானத்தில் எவருமில்லை.

     பொதுவாக வாலிபத்தில் தந்தையை அனைவரும் வெறுப்பர். ஆனால் அத்தந்தை வெறுப்பையும் பொருட்படுத்தாமல் தனது அனுபவக் கல்வியை மகனுக்கு வழங்குவார்.
   
   ஒருகால் அந்த  மகன் அந்த அறிவைப் பயன்படுத்தி நல் நிலையை அடைந்தால், அதற்காக அவன் தன் தந்தையை எண்ணி பெருமைப் படுவான்.

      எனது வாழ்க்கையின் பதினைந்தாவது வருடத்தில் எனது தந்தையின் ஸ்தாநம் மறைந்தது. அவர் படுத்த படுக்கையாகி விட்டார். அவரிடம் என்னால் எதையும் பேசயிலவில்லை.

     நானும் எனது தந்தையும்  நண்பர்களைப் போல இருந்தோம். என்னை அவ்வளவு புரிந்து கொண்டவர் என் தந்தை. காலம் மிக கொடியது.


         அப்போது நான் பத்தாம் வகுப்பிலிருந்தேன்.

       பள்ளியில் நாமினல் ரோலில் பெற்றோர் கையொப்பம் பெற ஒப்புதல் கடிதத்தை வீட்டுக்கு கொண்டுவந்தேன்.


                 அப்பாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.


              அம்மா அப்பாவுடன் மருத்துவமனையிலிருப்பதாக அறிந்த நான்,
அன்று வீட்டில் இருந்துவிட்டு.

                 அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மருத்துவமனைக்கு சென்றேன்.


             என் தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து, எப்பவும் போல் பேசிவிட்டு கையொப்பத்திற்காக அவரிடம் படிவத்தை நீட்டினேன்.


         அப்போது எனது தந்தையின் கண்களில் கண்ணீர் வடிந்தது.


          தாயும் அழுது கொண்டே அப்பாவிற்கு கையும் காலும் செயல்படுவதில்லை என கதறிவிட்டார்.

         நான் அதிர்ந்து போனேன்.





              

13 comments:

  1. இறுதி வரிகள் படித்து கலங்கி விட்டேன் நண்பரே... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ஐயா. எனது துயரைத்தைப் பகிர்ந்ததற்கு.

      Delete
  2. நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்.
    சார்லி சாப்ளின் வாழ்க்கையிலும் எண்ணற்ற துயரங்கள் சூழப்பட்ட நிலையிலேயே நகைச்சுவைக் கலைஞராக விளங்கினார் என கேள்விப்பட்டிருக்கிறோம்.
    துயரங்கள் பகிரப்படும்போது அது பாதியாக குறைந்துவிடும்.
    மகிழ்ச்சி பகிரப்படும்போது அது இரட்டிப்பாகும் என்பவை நாம் அணுபவத்தால் உணர்ந்தவை.
    தந்தை வாலிபர்களுக்கு வில்லன்களாக தெரிவது பெரும்பாலாக நடப்பது.
    அவ்வாலிபர்கள் தந்தையாகும்போது அவர்கள் அந்நிலையை புரிந்துகொள்வார்கள்.


    ReplyDelete
  3. Pothum nanba Vera eluthunga . Ungalai ivvaru kaana mudiyavillai

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது நண்பரே.அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கத்தான் செய்கிறது.

      Delete
  4. Heart melting post. what is your plan One-offs? or Sequences? Powerful writing!

    ReplyDelete
  5. நவீன் உங்கள் நகைச்சுவைக்குப் பின்னே இப்படி ஒரு சோகம் இருப்பதை அறியும் போது மனது மிகவும் வேதனைப்படுகிறது.

    இனியெல்லாம் சுகமே என்பது போல் உங்கள் வாழ்வு இறைவன் அருளால் இனிமையாக அமைந்திட பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். கண்டிப்பாக நன்றாக ம்கிழ்வுடன் இருப்பீர்கள் நவீன். இதுவும் கடந்து போகும்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ப்ரார்தனைகளுக்கும், வாழ்த்துக்களும் நன்றி. துளசிதரன் சார்,கீதா மேடம்.

      Delete
  6. நவீன் உங்கள் நகைச்சுவைக்குப் பின்னே இப்படி ஒரு சோகம் இருப்பதை அறியும் போது மனது மிகவும் வேதனைப்படுகிறது.

    இனியெல்லாம் சுகமே என்பது போல் உங்கள் வாழ்வு இறைவன் அருளால் இனிமையாக அமைந்திட பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும். கண்டிப்பாக நன்றாக ம்கிழ்வுடன் இருப்பீர்கள் நவீன். இதுவும் கடந்து போகும்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete