Saturday 13 June 2020

மொழித் திறன்



வணக்கம் நண்பர்களே,

                                    ஆங்கிலம் சரளமாகப் பேசுவது பற்றி நாம் சென்ற பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் பொதுவாக மொழித் திறன்களைப் பற்றி பார்ப்போம்.


        எந்த ஒரு மொழியில் நிபுணத்துவமடைய வேண்டுமானாலும் அதற்கு நான்கு அடிப்படை திறன்கள் தேவை.

          அவைதான், ஆங்கிலத்தில் சுருக்கமாக LSRW என்றழைக்கப்படும் அடிப்படைத் திறன்கள். ஒரு மொழியின் இந்த நான்கு வகை திறனை ஒருவர் பெற்றிருந்தால் தான் அவரை நாம் அம்மொழியில் அறிஞர் என்றழைக்கிறோம்.

தற்போது வரிசையாக இந்த LSRW திறன்களைப் பற்றி பார்ப்போம்.


  • Listening skills
  • Speaking skills
  • Reading   skills
  • Writing    skills

Listening skills:
              இது தான் மொழித் திறன்களில் முதன்மையானது.இந்த திறன் ஒருவர் குறிப்பிட்ட மொழியில் பேசும் போது அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன். இதை  TOEFL, IELTS போன்ற அங்கீகரிக்கப்பட்ட தரமான தேர்வு முறைகள் பரிசோதிப்பதால்,தற்போது பல கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்த கல்லூரிகள் மட்டுமல்லாது பள்ளிகளிலும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களோடு சில தனியார் மென் பொருள் நிறுவனங்களும் இணைந்து கணினி மற்றும் மென் பொருள் சேவைகளை வழங்குகின்றன. இதை நாம் அன்றாட வாழ்க்கையிலே செய்து விடலாம்.

          தற்போது நம் அனைவரின் வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டியானது உள்ளது. அதில் பல ஒளியலை வரிசைகளும்(channels) உள்ளது. அவற்றில் சில செய்தி ஒளியலை வரிசைகள் வரும். 

      உதாரணமாக ஆங்கிலத்தில் Listening திறனை மேம்படுத்த அந்த ஆங்கில செய்தி ஒளியலை வரிசையை தினமும் முப்பது நிமிடங்களாவது நாற்பது நாட்களுக்கு இடைவிடாமல் பயிற்சி செய்தால் ஆங்கிலத்தில் Listening திறனானது வளரும். இதே போல் தத்தமது மொழியை இவ்வாறு பயிற்சி செய்ய Listening skill வலுவுறும்.

     Listening திறனானது அடுத்த பேசும் திறனுடன் தொடர்புடையது. ஒருவர்  ஒரு மொழியில் எவ்வளவுக்கு எவ்வளவு கவனிக்கிறாரோ அவ்வளவிற்கவ்வளவு அம்மொழியில் நல்ல பேசும் திறனும் பெறுவார் என்பது மொழித்திறனாய்வு அறிக்கைகள் கூறும் உண்மை.


Speaking skills:

                   இதற்குத்தான் தற்போது மக்கள் வெகுவாக விழைகிறார்கள். ஆனால் சிலரே இதன் அடிப்படையையுணர்ந்து பயிற்சி பெற்றுப் பயன்பெறுகிறார்கள். ஆம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேச முறையான பயிற்சி அவசியம். தகுந்த மொழிச்சூழலும் இன்றியமையாததாகிறது. மொழியைப் பயில்பவருக்கு இந்த உலகமே ஆய்வுகூடமாகும். எங்கு வேண்டுமானாலும் திறன்களைப்  பயிற்சி செய்யலாம்.

        ஒரு நல்ல பேச்சுத் திறன் கொண்டவர் நிச்சயமாக நல்ல Listening skill உள்ளவராகத் தான் இருக்க முடியும்.

Reading skills:

       மொழித்திறன் வரிசையில் அடுத்த முக்கிய பங்குவகிப்பது வாசிப்பு. நிறைய வாசிக்க வாசிக்க அம்மொழியின் சிந்தனைகள் மனதில் பதியும்
Listening skill மற்றும் speaking skills பயிற்சியில்லாதவரும் கூட வாசிப்பு பயிற்சியால் அனைத்து மொழித் திறன்களையும் பெற்றுவிட இயலும்.வாசிப்பு என்பது புத்தகத்தை மட்டும் வாசிப்பதல்ல. அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களிலே நிறைய வாசிப்புப் பயற்சியுள்ளது.
 
            உதாரணமாக, ஒரு கோவிலுக்கு செல்கிறோம் என்றால் அங்குள்ள அறிவிப்புப் பலகைகள் மற்றும் தல வரலாறுகளைப் படிக்கலாம். பேருந்தில் பயணிக்கும் போது முன்னால் மற்றும் பக்கவாட்டில் செல்லும் வாகனங்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களைக் படிக்கலாம், இப்படி வாசிப்பின் எல்லை விரிவடைந்து கொண்டேயிருக்கும். எனது தந்தை சிறு வயதிலேயே என்னை வாகனத்தில் அழைத்துச்  செல்லும்போது வழியில் தென்படும் கடைகளின் பெயர்களை வாசித்துக் கொண்டே வா என்று கூறுவார்.

  இந்த பழக்கம் நாளடைவில் வாசிப்பின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் பள்ளிகளில் சில பத்திகளை வாசிக்கக் கொடுத்து  வினாக்களைக் கேட்டு விடையெழுதச்சொல்வது என்பது இந்த வாசிப்புத் திறனை பரிசோதிக்கவே. வாசிப்பை நேசிப்போம் மொழியில் ஆற்றலைப் பெருக்குவோம். பொறுமை இருந்தால் நிறைய வாசிக்கலாம். பொறுமையை வளர்த்துக் கொள்வோம்.

Writing skills:
     
   இதை தற்போதைய காலத்தில்'typing skill'என சொல்லவேண்டுமோ? தெரியவில்லை. எழுதுவது என்பது மொழியில் சரளமாக எழுதுவதைத் குறிக்கும். இலக்கணம் மற்றும் கோர்வைப் பிழையின்றி எழுதும் திறன். இந்த திறனை மேம்படுத்தவும் ஒரு முறையுள்ளது. தினமும் முப்பது நிமிடங்கள்  நாற்பது நாட்களுக்கு எதையாவது எழுதுவது தான். இப்படி பயிற்சி செய்தால் எழுத்துத் திறன் வளரும். பள்ளிகளில் 'composition' என்ற பெயரில் மாணவர்களை எழுதச் சொல்வது இதற்காகத்தான்.


குறிப்பு: நல்ல வாசிப்புப் பழக்கமுள்ளவர் தானே நல்ல எழுத்தாளராகவும் திகழ்வார் என்கிறது ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

அங்கீகரிக்கப்பட்ட மொழித் தேர்வுகளில் இந்த நான்கு திறன்களுமே பரிசோதிக்கப் படுகிறது.

   ஒரு மொழிப்பாட வகுப்பில் ஆசிரியர் இந்த நான்கு திறன்களிலும் மாணவர்களை பயிற்சி பெற செய்யவேண்டும்


ஆகவே வாசிப்பு அவசியம். வாசிப்பிருந்தாலே அனைத்து மொழித் திறன்களும் வாய்க்கும்.
 
      நாமனைவரும்  பொறுமையை வளர்த்துக் கொண்டு நிறைய வாசிப்போம் நண்பர்களே.

     




     


      

22 comments:

  1. // ஆகவே வாசிப்பு அவசியம். வாசிப்பிருந்தாலே அனைத்து மொழித் திறன்களும் வாய்க்கும். //


    இதெல்லாம் சரி...

    உணர்வது எனன..?

    அதற்கான செயல் என்ன...?

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பே தான் முயற்சி...கடைசி வரிகள் நண்பரே

      Delete
  2. அழகான விளக்கவுரை தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா.

      Delete
  3. மிக அருமையான பதிவு. சரியான விளக்கங்கள். நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். தங்கள் ஆசியுடன் தொடர வேண்டும்

      Delete
  4. பள்ளிகளில் சில பத்திகளை வாசிக்கக் கொடுத்து வினாக்களைக்
    கேட்டு விடையெழுதச்சொல்வது என்பது இந்த வாசிப்புத் திறனை பரிசோதிக்கவே.//

    எக்ஸாக்ட்லி. நவீன் எங்கள் பள்ளிக்காலங்களில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் கொடுத்த பயிற்சிகள் இதே. இது வகுப்பில் வாரத்தில் இரு நாட்கள் செய்யப்படும். நாம் வாசிக்கும் போது மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்பதை இடையில் கேள்விகள் கேட்டு அல்லது கேள்விகளை மாணவிகளையே உருவாக்கச் சொல்லிப் பயிற்சி. கேள்விகள் என்றால் கோடிட்ட இடம் நிரப்புதல் முதல் ஒரு வார்த்தை பதில் முதல் பெரிய கேள்விகள் வரை.
    உச்சரிப்பு சரி செய்யப்படும்.

    அப்புறம் வார இறுதியில் வாசிக்க வேண்டி வெள்ளி தோறும் நூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்துச் செல்ல வேண்டும். அதை வாசித்து சுருக்கமாக எழுதிக் கொண்டு வர வேண்டும் விமர்சனம். என்று பல பயிற்சிகள். என் மகனுக்குப் பள்ளியில் இதெல்லாம் இல்லை என்றாலும் நான் வீட்டில் கொடுத்தேன்.

    மிக மிக மிக நல்ல பதிவு நவீன். நீங்கள் ஆசிரியராக இருப்பதில் சந்தோஷமாக, பெருமையாக இருக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆம் மேடம். TOEFL,IELTS மற்றும் Cambridge தேர்வுகளில் இத்திறன்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நன்றி மேடம்

      Delete
  5. நவீன்,

    ஆக்கபூர்வமான /அறிவுப்பூர்வமான /பயனளிக்கும் பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உண்மைதான் நவீன். நிறைய வாசித்திருந்தாலும் எழுத ஆரம்பித்தப்பின் இன்னும் நிறைய வாசிக்கத்தோன்றுகிறது. வாசிக்கிறேன். நல்ல விளக்க்வுரைக்கு நன்றி. அருமையான பதிவு

    ReplyDelete
  7. நல்ல முயற்சி.  தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி‌ ஸ்ரீ ராம் அவர்களே. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  8. LSRW - நல்ல விளக்கம்.

    வாசிப்பை நேசிப்போம். சிறப்பான விளக்கம் நவீன் ஹரி. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.. தங்கள் வழிகாட்டலில் தொடர்கிறேன்.

      Delete
  9. Thillaiakathu Chronicles வலைப்பூ மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து மகிழ்கிறேன். எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. சிறப்பான எளிய வழிகாட்டும் கட்டுறை. நன்றி.

    ReplyDelete
  11. நன்றி அரவிந்த். உங்களை விடவா தலைவா

    ReplyDelete
  12. Super explanations Keep Rocking bro! நீங்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகள் எளிமையாகவும், அழகாகவும் உள்ளது. Awesome!

    ReplyDelete