Wednesday 10 June 2020

ஸ்ரீமந் நாதமுனிகள்


   

                                                          ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:       
                                                                         
    
                                         நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட
ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்துவே

 ஸ்ரீமந் நாதமுனிகள் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகில் அமைந்துள்ள காட்டு மன்னார் கோவில்() வீர நாராயணபுரத்தில் கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7 ம் தேதி புதன் கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இவர் ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் நித்யசூரியானகஜாநநர்என்ற ஆனை முகத்தவரின் அம்சமாக பிறந்தார்.

   இவரது பெற்றோர் இவருக்கு ஸ்ரீ ரங்கநாதன் என்ற பெயரை வழங்கினர். இவர் முனிவர் போல யோக மார்கத்தில் சிறந்து விளங்கியதால் இவரை அனைவரும் முனிவரென அழைத்தனர்.


   நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை தொகுத்தருளியவர்.

ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் அனைத்தும் காலத்தின் கொடுமையால் உலகறியாமல் மறைந்து போனது.

     சுமார் 3500 வருடங்கள் ஆழ்வார்கள் காலத்திற்கும் நாதமுனிகள் காலத்திற்கும் இடையில் உருண்டோடின. 

 நாதமுனிகள் ஒரு முறை கும்பகோணத்திலுள்ள ஆராவமுத பெருமாளை தரிசிக்க சென்றார். அங்கு பெருமாளை சேவித்துக்கொண்டிருந்த இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆராவமுதனைக் குறித்த பத்துப் பாசுரங்களை பெருமாளின் முன் பாடிக்கொண்டிருந்தனர்.

   அந்த பாசுரங்களின் இனிமையில் திளைத்த நாதமுனிகள் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் ஆயிரத்துள் இப்பத்தும் என்று பாடினீர்களே, ஏனைய 990 பாசுரங்களையும் தாமிருவரும் அறிவீர்களா என்று வினவ அதற்கவர்கள்
 நாங்கள் இந்த பத்துப் பாசுரங்களை மட்டுமே அறிவோம் என்று கூறினர்.



   நாதமுனிகள் அவர்கள் பாடிய கடைசி பாசுரத்தைச் சற்று எண்ணிப்பார்த்தார். அதில்குருகூர்ச் சடகோபன்என்ற சொல்லை பிடித்து, நம்மாழ்வாரின் அவதாரஸ்தலமான குருகூரையடைந்தார்.

அவ்வூரில் நம்மாழ்வாரின் சிஷ்யரான மதுரகவியாழ்வாரின் சிஷ்ய பரம்பரையில் வந்த பராங்குச தாசரை சந்தித்தார். அவரிடம் நாதமுனிகள் தான் வந்த காரணத்தைக் கூறி, சடகோபர் அருளிய ஏனைய பாசுரங்களைக் கேட்டு அவரின் உதவியை நாடினார். பராங்குச தாசர் நாதமுனிகளுக்கு ஒரு தகவலைக் கூறினார்.

  பராங்குச தாசர் தனக்கு நம்மாழ்வாரின் பாசுரங்கள் எதுவும் தெரியாது எனவும். மேலும் நம்மாழ்வார் குறித்து மதுரகவியாழ்வார் அருளிய ‘கண்ணிநுன்சிறுதாம்பு’ பதினோரு பாசுரங்களையே தாம் அறிந்துள்ளதாகக் கூறினார்.

   மேலும், யோகத்தில் 12000 முறை இந்த கண்ணிநுன்சிறுதாம்பை உருச் சொன்னால் நம்மாழ்வார் காட்சியளிப்பார் என்று தனது முன்னோர்கள் பகிர தாம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.


  இதைக்கேட்ட நாதமுனிகள் 12000 முறை கண்ணிநுன்சிறுதாம்பை உருச்சொல்ல முடிவெடுத்து நம்மாழ்வார் எழுந்தருளிய புளியமரத்தின் அடியிலமர்ந்து 12000 முறை கண்ணிநுன்சிறுதாம்பை உருச் சொல்ல ஆரம்பித்தார்.

  பராங்குச தாசர் கூறிய படியே நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் யோகத்தில் தோன்றினார்.

    நாதமுனிகளுக்கு தாம் அருளிய திருவாய்மொழி 1102 பாசுரங்களை வழங்கினார். நாதமுனிகளுக்கு தனது ஏனைய பாசுரங்களையும் அருளியதோடு மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் அளித்தருளினார்.

   மேலும் பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து நாதமுனிகள் பெற்றுகொண்டார்.

  

   இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட நாதமுனிகள் நம்மாழ்வாரை வணங்கி அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களையும் நாதமுனிகள் தனது சிஷ்யர்களான மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் ஆகியோர் உதவியுடன் பண் சேர்த்து, தாளமிசைத்து தொகுத்தருளினார்.

  ஆகவே கண்ணிநுன்சிறுதாம்பு நாலாயிரத்தையும் பெற்றுக் கொடுத்த பெருமையுடையது.


                    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்







  





 

  

  


12 comments:

  1. புது தகவல்கள் எங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாசித்ததற்கு நன்றி நண்பரே

      Delete
  2. நவீன் ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க. நம்மாழ்வாரின் ஃபேமஸ் வாசகம் தெரியும்தானே. அத்தைத் தின்று அங்கே கிடக்க்கும்.

    கம்பர் எழுதிய சடகோபனந்தாதி, சடகோபன் எனப்படும் நம்மாழ்வாரைப் பற்றியதுதான் என்றும் சொல்லப்ப்டுகிறது.

    நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை பிறந்த ஊரில்தான் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவண்பரிசாரம்/திருப்பதிசாரம். அவர் வாழ்ந்ததாகச் சொல்லபப்டும் இடம் பஜனை மடம் என்று இப்போதும் ஆராதிக்கப்படுகிறது அதனை ஒட்டித்தான் எங்கள் வீடும் இருந்தது. நம்மாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அற்புதம் மேடம்..ஆழ்வார் சம்பந்தம் பெற்ற தாம் எனக்கு நட்பாய்யிருப்பதை எண்ணி பெருமிதமடைகிறேன். திருவண்பரிசாரம் எம்பெருமான் திருவடிகளே சரணம்.நன்றி மேடம்

      Delete
    2. சடகோபர்அந்தாதியை கம்பர் தான் இயற்றினார். கம்பராமாயணம் அரங்கேற்றத்தை ஆச்சாரியனை வணங்காமல் கம்பர் செய்வதை அரங்கன் ஏற்க வில்லை.கம்பர் சடகோபரந்தாதி பாடிய பின் தான் கம்பராமாயணம் காட்டழகிய சிங்கரால் அட்டகாச சிரிப்புடன் அங்கீகரிக்கப்பட்டதாம்.


      Delete
    3. கேட்டிருக்கிறேன் நவீன் மிக்க நன்றி.

      கீதா

      Delete
  3. சிறப்பான தகவல்கள். தொடரட்டும்.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete