Saturday 6 June 2020

கெட்ட கொழுப்பு அதிகமாயிருக்காமா!



வணக்கம் நண்பர்களே,

              கடந்த ஒரு வாரமாக பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன்.


          ஊரடங்கால் வீட்டில் தனித்திருந்த குறை தீர எனது சித்தி வீட்டிற்கு சென்றோம்.   அங்கு எனது மாமா அமர்ந்திருந்தார் அவரை நான் அங்கு எதிர்பார்க்கவில்லை.
     
 அவரின் ஆலோசனைகள் அனைத்தும் நன்றாகவே இருக்கும்.

       எனவே அனைவரும் அமர்ந்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.

       ஆனால் எனக்கோ எனது மாமாவின் மீது பொறாமை. இவர் சொல்வதை நாமென்ன கேட்பது என்ற மனோபாவம்.

பொதுவாகவே எனக்கு பிடிக்காத விஷயத்தில் தலையிட மாட்டேன்.
 
 எனவே, வேறொரு அறையில் நான் தனித்தமர்ந்து 'Hungry Shark' விளையாடிக் கொண்டிருந்தேன்.

      நீரருந்த வந்த நான் எனது தாயாரால் தடுக்கப் பட்டு அவர்களுடன் அமர்த்தப் பட்டேன்.
     
   
   எனது மாமா  தன்வந்திரியின் சீடர்களான அஸ்வினி குமாரர்களின் அருள் பெற்ற மருத்துவ மேதை போலும். அவரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டேன்.


    எனது உடல் பருமன் காரணமாக என்னை உடல் பரிசோதனை செய்ய சொன்னார்.

 நானும் செய்தேன்.


           பரிசோதனையின் முடிவுகள் மோசமாகவுள்ளது.
   

   கெட்ட கொழுப்பு  அதிகமாகவுள்ளதாம்.

          நம்முடலிலுள்ள  கொழுப்பின்  அளவை அறிய செய்யப்படும் பரிசோதனை 'Lipid profile'என அழைக்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் முடிவில் நமக்கு நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவுகள் மதிப்புக்களாக வழங்கப்படும்.

     அவ்வாறு வழங்கப்படும் மதிப்புக்களில் மூன்று பிரிவுகள் இருக்கும்.
 
         அவையாவன,

  • HDL
  • Triglycerides
  • LDL                          

     இதில் HDL என்பது நமது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவைக் குறிக்கும். நல்ல கொழுப்பு என்பது நமது உடலுக்குத் தேவையான கொழுப்பாகும்.  மேலும்,.    எளிதில் கரையக் கூடியதுமாம்.

      Triglycerides என்பது நமக்கு சக்தி வழங்கக் கூடியதாம்.

     LDL தான் கெட்ட கொழுப்பாம். இந்த கொழுப்பு உடற்பயிற்சியினாலும், நடைபயிற்சியினாலும் கூட கரையாதாம்.   இதுதான் இருதய கோளாறுகளுக்கு வழிவகுக்கிறதாம்.


          எனக்கு இந்த LDL லின் அளவுதான் அதிகமாகவுள்ளதாம்.

           மாத்திரையைத் தவிர வேறு வழியில்லையாம்.

     எனவே என்னை மாத்திரை சாப்பிடக் கூறி பரிந்துரைத்தார் அந்த நல்வுள்ளம் படைத்த  மருத்துவ மேதை.

      இப்போது  நான்கு நாட்களாக  மாத்திரை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

        இதற்கும்,    எனது உணவுப்பழக்கம் மிக எளிமையானது.

            அசைவம் கிடையாது, துரித உணவுகள் கிடையாது

                மது கிடையாது.   தினமும் காய்கறிகள், கீரைவகைகள் மற்றும் பழங்கள் தான் உண்டு வந்தேன்.    ஏன் இவ்வாறு நமக்கு ஏற்பட்டது என்று ஒரு வருத்தமுள்ளது.

       இந்த வருத்தம் நாளடைவில் மனவழுத்தமாக மாறிவிடுமோ வென பயமாகவுள்ளது.
 
            பயமே நமது வயிற்றில் ஒரு வகையான அமிலத்தை சுறந்து நோயை ஏற்படுத்தவல்லது.

          இதையெல்லாம் சிந்திக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.





      குருபவனபுராதீசனிடம் எனது பாரத்தை சமர்பித்து விட்டேன்.


      புத்திக்கு எட்டாத சிலவற்றை தெய்வத்திடம் விட்டு விடுவதே நல்லது.


 




13 comments:

  1. மனதை மட்டும் Triglycerides ஆக வைத்துக் கொண்டால் போதும்...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.
      தங்கள் ஆலோசனைக்கு நன்றி சார்

      Delete
  2. எனக்கும் கெட்ட கொழுப்பு அதிகம். ஒவ்வொரு மருத்துவமும் ஒவ்வொரு தீர்வு கொடுக்கும். புளி சேர்த்த உணவுகள்,ரீஃபைண்டு எண்ணெய், நொருக்கு தீணி கூடாது. காய்கரிகள், மோர், சாதம் வடித்தது. நெய், அசைவப் பிரியர்களுக்கு மட்டன், நார்ச் சத்து கொண்டைக் கடலை, பால் உகந்தது என்கிறது ஆயுர்வேதம்.

    ReplyDelete
  3. don't worry, all is well bro it will cure soon. அடுத்து என்ன பதிவு எழுதலாம் அப்படின்னு டீப்பா யோசிச்சிக்கிட்டே இருந்தீங்கன்னாலே எல்லாம் தானா சரியாகிடும். :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் நல்லது தான். முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே.

      Delete
  4. அன்பு அரவிந்த்,
    அரிசிச் சோறு, ஸ்வீட் வகைகளை தவிர்க்க கூறியிருக்கிறார்.

    ReplyDelete
  5. மேலும் நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  6. நவீன் கவலையே வேண்டாம். எல்லாம் குறைந்துவிடும். உங்கள் உணவுப்பழக்கம் நன்றாகவே உள்ளது. மருத்துவர்கள் இனிப்புகள், கார்போஹைட்ரேட்/மாவுச் சத்துப் பொருட்களைக் குறைக்கவோ தவிர்க்கவோ சொல்வார்கள்.

    ப்ரிஸ்க் வாக் செய்யுங்கள். முடிந்தால் நல்லதொரு யோகா ஆசிரியரைப் பார்த்து உங்களுக்கு உகந்த யோகப் பயிற்சிகளைச் செய்யுங்கள் விரைவில் சரியாகிவிடும் கவலை வேண்டாம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மேடம் எட்டுப் போடுகிறேன் வீட்டில்.

      Delete
  7. happy mind is a good medisin. be happy and follow doctor advice.

    ReplyDelete