Sunday 7 June 2020

ஆழ்வார் தமிழமுதம்

               
                     
                                   ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:       
         ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    
     ஸ்ரீமந் நாராயணன் தனது நிர்ஹேதுக க்ருபையால் மண்ணுலகில் வாழும் ஜீவாத்மாக்களை தன்னடியில் சேர்க்கத் திருவுள்ளம் கொண்டு யுகம் தோறும் அவதரிக்கிறான்.

அவ்வாறு செய்யும் அவதாரங்களால் அந்த அவதார காலத்தில் வாழும் ஆத்மாக்களை மட்டுமே காக்க முடிந்தது.  மேலும் பரமாத்மாவான இறைவனே இறங்கி வருகையில் மானிடர்கள்  அந்த அவதாரங்களில் பெருமையை உணரவில்லை. எனவே முள்ளை முள்ளால் எடுக்கப் பரமாத்மா தனது அம்சம் கொண்ட ஜீவாத்மாக்களையே அனுப்பினான்.அப்படி அவதரித்தவர்கள் தான் ஆழ்வார்கள்.

       அவர்கள் தெய்வத் தமிழில் தங்கள் பக்தி வெள்ளத்தைப் பாய்ச்சிப்  பைந்தமிழ் பாசுரங்களாகப் பாடினார்கள்.

            ஆழ்வார்கள்    நம் தமிழ் மண்ணில் அவதரித்து திருமாலிடம் பக்தி பண்ணிகாண்பித்தார்கள். அவர்களின் ஈர சொற்களே நாலாயிரம் பாசுரங்களாக பின்னாளில் தொகுக்கப்பட்டது.


அவ்வாழ்வார்களைப் பற்றியும் அவர்கள் அருளிய பாசுரங்கள் குறித்தும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.


   ஆழ்வார்களின் பாசுரங்கள் தான் ஸ்ரீ வைணவ நெறியின் அடிப்படைப் ஆதாரம்.


 ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களில் மதுரகவியாழ்வாரையும் ஆண்டாளையும் தனி கோஷ்டியாகப் பிரித்து, ஆழ்வார்கள் பதின்மரெனவும் கூறுவர்.



     இப்படி வழங்கக் காரணம் மதுரகவியாழ்வார் மற்றும் ஆண்டாளின் ஆச்சாரிய பக்தியே யாம்.


    மதுரகவியாழ்வார் தனது குருவான ஸ்ரீ நம்மாழ்வாரைத் தவிர யாரையும் ஏன், பெருமாளைக் கூட பாடவில்லை.


     ஆண்டாள் பெருமாளைப் பாடியிருந்தாலும் தனது தந்தையும் குருவுமான பெரியாழ்வாரை போற்றியே  அனைத்து பாசுரங்களையும் பாடியுள்ளார்.


    எனவே குருபக்திக்கு எடுத்துக்காட்டாக இவ்விருவரையும் விஷேசித்துத் தனித்துக் கூறுவதும் வழக்கம்.


         பன்னிரு ஆழ்வார்கள்.


  கீழ்காணும்  க்ரமத்தில் ஆழ்வார்கள் அவதரித்தார்கள்.


 அவர்களது அருளிச்செயல்களும் கீழேவுள்ளது.


பொய்கையாழ்வார்:

   முதல் திருவந்தாதி - 100 பாசுரங்கள்

பூதத்தாழ்வார்:

 இரண்டாம் திருவந்தாதி-100 பாசுரங்கள்

பேயாழ்வார்:

 மூன்றாம் திருவந்தாதி-100 பாசுரங்கள்

திருமழிசையாழ்வார்:

    திருச்சந்த விருத்தம் -120 பாசுரங்கள்

   நான்முகன் திருவந்தாதி-96 பாசுரங்கள்

நம்மாழ்வார்:

  திருவிருத்தம் - 100 பாசுரங்கள்

  திருவாசிரியம் - 7 பாசுரங்கள்

  பெரிய திருவந்தாதி- 87 பாசுரங்கள்

  திருவாய்மொழி- 1102 பாசுரங்கள்

மதுரகவியாழ்வார்:

  கண்ணிநுன்சிறுதாம்பு - 11 பாசுரங்கள்

பெரியாழ்வார்:

பெரியாழ்வார்திருமொழி-473பாசுரங்கள்

ஆண்டாள்:

 திருப்பாவை - 30 பாசுரங்கள்

 நாச்சியார் திருமொழி - 143 பாசுரங்கள்

 குலசேகராழ்வார்:

 பெருமாள் திருமொழி - 105 பாசுரங்கள்

 தொண்டரடிப் பொடியாழ்வார்:

 திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள்

 திருமாலை - 45 பாசுரங்கள்

  திருபாணாழ்வார்:

 அமலனாதிபிரான் -10 பாசுரங்கள்

  திருமங்கையாழ்வார்:

 சிறிய திருமடல் - 40 பாசுரங்கள்

 பெரிய திருமடல் - 78 பாசுரங்கள்

 திருக்குறுந்தாண்டகம் - 20 பாசுரங்கள்

 திருநெடுந்தாண்டகம் - 30 பாசுரங்கள்

 திருவேளுக்கூற்றிருக்கை - 1 பாசுரம்

 பெரிய திருமொழி - 1084 பாசுரங்கள்



     இவற்றுடன் திருவரங்கத்தமுதனார் இயற்றிய ராமாநுஜ நூற்றந்தாதி 108 பாசுரங்களும் சேர்த்து மொத்தம் நாலாயிரம் என விளங்குகிறது.


         இவ்வனைத்துப் பாசுரங்கள் அடங்கியுள்ள தொகுப்பு 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' என அழைக்கப்படுகிறது.


      இதை தொகுத்தருளியவர் நாதமுனிகளென விளங்கும் அரங்கநாத முனியாவார். இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் அவதரித்தவர்.


        ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்

7 comments:

  1. எழுத்துக்களின் அளவு சரி செய்யப்பட்ட பதிவா?

    ReplyDelete
  2. ஆம் நண்பரே..இதற்கு முந்திய பதிவில் எழுத்தை சரி செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானதால் பதிவையே புதுப்பித்து விட்டேன்.

    ReplyDelete
  3. ஏதோ அபச்சாரப்பட்டு விட்டேன் போலிருக்கிறது.

    ReplyDelete
  4. மீண்டும் பதிவிட்டு விட்டீர்களா? மீண்டும் படித்து ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  5. ஆம் சார். அந்த சின்ன எழுத்துக்கள் பழைய பதிவில் மாற மறுத்தது. எனவே பதிவைப் புதுப்பித்து விட்டேன்.

    ReplyDelete