வணக்கம் நண்பர்களே,
நான் 2010- 13 காலகட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு கோயம்புத்தூரில் இருக்கும் பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் படித்தேன். இறுதியாண்டில்,வகுப்பில் இருந்த சக மாணவர்கள் முதுகலைக்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருந்தனர்.
நானும் அவர்களோடு சேர்ந்து விண்ணப்பித்து நுழைவு தேர்வையும் எழுதி இருந்தேன். கூடவே நான் திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திலும் முதுகலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அங்கும் நுழைவு தேர்வு எழுதி இருந்தேன்.நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாயின.இரண்டு பல்கலைக்கழகங்களிலும் இடம் கிடைத்தது.
ஆனால் நான் தேர்வு செய்தது வேங்கடேஸ்வரா பல்கலைகழகம்.அங்கு அழகான,ஆச்சாரமான பெண்கள் இருப்பார்கள் என்பதும் எனது மனதில் வண்ணங்களை தீட்டியது.அப்படியானதொரு மனக்கணக்கு போட்டு, நான், 2013-ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி கல்லூரிக்கு சென்றேன்.ஆனால் அப்போது அங்கு மாநிலங்களை பிரிக்கும் போராட்டத்தை எதிர்த்து விறுவிறுப்பாக போராட்டம் நடந்து கொண்டிருந்தது.அது எனக்கு தெரியாது.
கையில் வேரு ஹாஸ்ட்டலில் தங்க நான் இரும்பு பெட்டியுடன் பல்கலைக்குள் நுழைவதை பலரும் வித்தியாசமாக பார்த்தனர்(தீவிரவாதியோ எனக்கூட எண்ணியிருக்கக்கூடும்). கல்லூரி திட்டமிட்டபடி திறக்கப்படவில்லை.
அக்டோபர் மாதம் 21 அன்று தான் கல்லூரி செயல்படத் தொடங்கியது.நான் கல்லூரிக்கு 23 -ம் தேதி சென்றேன். அங்கு அனைத்தும் நான் எதிர்பார்க்காத சூழல் நிலவியது.புது முகங்கள்,மொழிப் பிரச்சினை போன்றவை என்னை பாதித்திருந்தன.
முதல் வகுப்பு முடிந்த போது ஆசிரியர் வராத இடைவெளியில்
எப்படியோ மகேஷ் என்னுடன் பேசினான். அவனுக்கு தமிழ் சரளமாக வருவதை கண்டு நான் ஆனந்தம் அடைந்தேன்.
அப்போது ஆந்திர பிரதேசத்தின் ஒரு மாவட்டமான அனந்தபூரில் கதிரி என்னும் ஊரைச் சேர்ந்த வேங்கடேஷ் நாயக் என்னை அதிசயப்பிறவியாகக் கண்டான்.அதற்கு காரணம் எனது சரளமான ஆங்கிலம்.அவன் என்னை நண்பனாக ஏற்க விழைந்தான்.
அவனை நான் ஜூலை மாதமே சந்தித்திருந்தேன்.அவன் எனக்கு அப்போது பல உதவிகளைச் செய்தான்.மேலும், அவன் எனக்கு நண்பனாக இருந்தால் விடுதியில் சில காரியங்களை சாதிக்க உதவுமே என அவனை நண்பனாக்கினேன். அவனையும் என்னையும் ஒரே அறையில் போட்டுவிட்டார் விடுதிக்காப்பாளர்.அவனுக்கு ஒரே சந்தோசம்.என்னை நோக்கி ஆனந்தமுடன் அறையின் சாவியை கையில் எடுத்துக்கொண்டு ஓடி வந்தான்.வந்து என்னிடம் அவனுடைய அரைகுறை ஆங்கிலத்தில் நானும் அவனும் ஒரே அறையில் தங்கபோவதாகக் கூறினான்.
இருவரும் எங்கள் உடைமைகளை அறையில் வைத்தோம். எனது மொளுக்மொளுக் உடலால் பெட்டியை தூக்க இயலாத போது அவன் எனது இரும்புப்பெட்டியை நகர்த்தி அவனே அதை எனக்கு வசதியான இடத்திலும் வைத்தான்.அதன்பின், என்னை மிக்க மகிழ்ச்சியுடன் பார்த்தான்.
அவன் இதையெல்லாம் ஏன் செய்கிறான் என வியந்தேன்.ஆந்திர மக்கள் இவ்வளவு நல்லவர்களா?
அப்போது தான் அவன் கூறினான்,
" Naveen, I want to speak like you in English." ஓஹோ.இவ்வளவு சிசிருஷையும் இதற்குத்தானா என மனதில் விளங்கி விட்டது.
எது எப்படியோ, பெருமாளின் அருளால் எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான்.அவன் மெதுவாக தன் துணிப்பையை திறந்து அதிலிருந்த பொருட்களை எடுத்தான்.அது எனக்கு தேவாசுரரிடையே நடந்த திருப்பாற்கடல் மதனம் மற்றும் அதிலிருந்து பல பொருட்கள் வருவதையும் நினைவுக்கு கொண்டு வந்தது.
அவன் நிறைய பொருட்களை வைத்திருந்தான். முதலில் வெளி வந்தது ட்தூத் பேஸ்ட்.இவனிடமே ஓட்டி விடலாம் என்ற எண்ணம் வந்தாலும் அவனது வறுமையான நிலையை அறிந்ததும் அவ்வெண்ணம் என்னை விட்டோடியது.
அவன் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது.இவ்வாறு நாங்கள் உரையாடி கொண்டிருக்கும் போது,அவன் தனது பையிலிருந்து ஒரு ஆஞ்சநேயர் படத்தை எடுத்து வைத்தான். நான் அதை கண்டதும் ஒரு ஹனுமான் துதியை கூறினேன்,

“மனோர்ஜவம் மாருதி துல்ய வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீ ராம தூதம் சரணம் ப்ரபத்யே”
அவன் அதை கேட்டதும் மேலும் பூரித்துப் போனான்.
என்னிடம் நிறைய ஆன்மிக தகவல்களை எதிர்பார்த்தான். நானும் எனக்கு தெரிந்த கருத்துக்களை அவனிடம் பகிர்ந்தேன்.
சற்று நேரத்தில் என்னை அவன் குருவிற்கு நிகராக மதிக்கத் தொடங்கிவிட்டான்.எனது மனசாட்சி என்னிடம்," இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல" என்றது.சரி போகப் போக நாறப்போகிறது தானே கொஞ்ச நாள் இப்படியே நடிப்போம் என்று தீர்மானித்தேன்.
நீரில் போட போட துணியின் சாயம் வெளுக்கத்தானே செய்யும் நண்பர்களே!

துணி வெளுத்ததா ? என்பதை அறிய தொடர்கிறேன்...
ReplyDelete- கில்லர்ஜி
வெளுக்கத்தான் போகிறது சார்...மகேஷ் எனக்கு யுனிகோடு எழுத்து பயிற்சியளித்தான்.
Deleteஇக்கரைக்கு அக்கரை பச்சையாகத்தான் இருக்கும். எப்படியோ அழகான ஆச்சாரமான பெண்களின் கையால் வெளுத்து வாங்கப்படாமல் இருந்தா சரி.
ReplyDeleteThanks for your concern. i look so innocent so i escape..
DeleteHa ha ha ultimate brother...I think you are naughty in everything becz your way of written shows your naughty...and then eagerly waiting for continuation...
ReplyDeletenaughtiness has its own sweetness certain moments of life
Deleteஒளிவு மறைவற்ற பதிவு
ReplyDeleteவாழ்வில் என்ன இருக்கு மறைப்பதற்கு என தோன்றி விட்டது நண்பரே
Deleteஇறையுணர்வு அதிகமோ? அதுவும் இந்த வயதிலேயே! நல்ல விஷயம்தான்.
ReplyDeleteதுளசிதரன்
நமஸ்காரம் சார், அடியேனுக்கு பள்ளிக் காலம் முடிந்த பின் வீட்டருகிலேயே ஓர் சத்சங்கம் ஏற்பட்டது...அதன் விளைவாகத்தான் இது போல்.
Deleteஅதென்ன ஆச்சாரமான பெண்கள்?!!! ஹா ஹா ஹா ஹா நவீன் ஒரு வேளை உங்க யங்க்ஸ்டர்ஸ் டிக்ஷ்னரில அதுக்கு வேற அர்த்தமோ?!!
ReplyDeleteஅந்த ஸ்லோகத்துல ஸ்ரீராம தூதம் சரணம் ப்ரபத்யே வா நீங்க கற்றது. எனக்கு என் பாட்டி சொல்லிக் கொடுத்ததுல சிரஸா நமாமி! நு
மை ஃபேவரைட் ஆஞ்சு! அது சரி, //என்னிடம் நிறைய ஆன்மிக தகவல்களை எதிர்பார்த்தான். நானும் எனக்கு தெரிந்த கருத்துக்களை அவனிடம் பகிர்ந்தேன்.// யப்பா மேல பார்த்தா விஷயம் வேற போல இருக்கு இப்ப பார்த்தா ஒரே ஞானி விஷயமா இருக்கு பக்திப் பிழம்பாக!!!
I am enjoying!
கீதா
ஆச்சாரமான பெண்களென்றால் சத்வகு வளர்ந்த பெண்கள்.அவர்கள் வாழ்வில் கிடைத்தால் நிம்மதியாக சத்சங்கத்திலே வாழ்க்கை கழியும்.நிச்சயமாக அவர்கள் நல்ல பிள்ளைகளைத்தான் பெறுவார்கள்.வீடும்,நாடும் இன்புற..
Deleteஹேய் நவீன் உங்க பார்த்தேன்...செம காமன் இன்ட்ரெஸ்ட் இருக்கே...ம்யூஸிக்..க்ருதிஸ்..
ReplyDeleteமெய்யாலுமே நீங்க பக்தி "மான்" i mean man!!!! மகேஷ், அரவிந்த் எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.
கீதா
மேம். நான் பசுத்தோல் போர்த்திய நரி.. சும்மா கதவிட்டிருகேன் ப்ரொஃபைல்ல...ஒரு கீர்த்தனம் கூட என் வாயில வராது. சங்கீத ஞானமல்லாதவன். "ஏழை ஏதிலன் கீழ் மகன்"
Deleteமாமி, மனஸா ஸ்மராமியுமுண்டு,சரணம் ப்ரபத்யேவுமுண்டு மஹா பெரியவா சொல்லிருக்காராம்...ஃபில்டர் காபி தருவேளா மாமி?
Deleteஓ!! ஓகே அர்த்தம் ஒன்றுதானே இருந்துவிட்டுப் போகட்டும்!
Deleteபட் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாமின்னு சொன்னதற்கு. நோ மாமி ப்ளீஸ்.
ஃபில்டர் காஃபிதானே!! பேஷா தருவேன்! வாங்க வீட்டுக்கு. காஃபி என்ன விருந்தே தருகிறென்.
கீதா
ஏழை ஏதிலன் கீழ் மகன்"//
Deleteதிருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தின் முதல் வரி...
உடனே எனக்கு முழுவதும் தெரியும்னு நினைச்சுராதீங்க சுத்தமா தெரியாது.
மீக்கும் தெலுங்கு லேது ஸோ கீர்த்தனைகள் எதுவும் நுழையாது. சும்மா கேட்பதோடு சரி எதுவும் தெரியாது எனக்கும்..உங்களைப் போல நானும் கதை விட்டேன்!! அம்புட்டுத்தான்.
கீதா
சாரி திருமதி.கீதா மேடம் பழைய கமெண்ட் பாக்காம விட்டுட்டேன்.எங்க ஆத்துப் பக்கத்திலே ஒரு கீதா மாமி இருக்கார். அந்த வாக்கிலே அவ்வாறு விழித்துவிட்டேன்.அடியேனை க்ஷமிக்கனும்.
Deleteநாக்கும் தெலுங்கு ராதண்டி..கானி அப்பப்புடு மாத்தலாடதே பாக வௌஸ்ததி மேடம்
Deleteஎனக்கு தனிப்பட்ட ரீதியில் இறை நம்பிக்கை இல்லை. இறைவனை அறிவியல் பூர்வமாகவும் மனிதனின் உளவியல் பூர்வமாகவும் புரிந்துகொள்ள முயல்கிறேன். உன் இறை பக்தியையும் ரசித்து தொடர்கிறேன்.
ReplyDeleteபக்தியெல்லாமில்லை நண்பரே.சும்மா பகல் வேஷம்
Deleteஅருமை. இரசித்து படித்தேன் comon waiting for upcomings!
ReplyDeleteநன்றி நண்பரே..வாசகர்களின் கருத்துக்களே உற்சாகம் அளிக்கவல்லது.
ReplyDeleteஆங்கிலம் தமிழ் இரண்டுமே உனக்கு மிகச் சரளமாக வருகிறது. தமிழில் உனது முதல் பதிவு இப்போதுதான் நான் படிக்கிறேன். ரொம்ப சுவாரஸ்யமா எழுதுற
ReplyDelete