வணக்கம் நண்பர்களே,
கெட்ட கொழுப்பு அதிகமாகவுள்ளதால், எனது உணவுமுறைகளிலும்,வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களை நடைமுறைபடுத்தியுள்ளேன்.
இதன் விளைவாக நான் தினமும் காலையில் இரண்டு சப்பாத்தி அல்லது கோதுமை தோசை மதியம் கொஞ்சம் அரிசிச்சோறு காய்கறிகளுடன் மற்றும் இரவு மீண்டும் கோதுமை தோசையோ,சப்பாத்தியோ என சாப்பிட்டு வருகிறேன்.
காலை 40 நிமிடங்கள் நடை பயிற்சி செய்கிறேன். 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறேன். இரவு உணவிற்குப் பின் வீட்டின் வெராண்டாவில் எட்டுப் போட்டு நடப்பேன். நடப்பேன் நடப்பேன் நடந்து கொண்டேயிருப்பேன் இரவு 10 மணிவரை.
எங்கள் வீட்டின் எதிரில் ஒரு இரண்டடுக்கு கட்டிடமுள்ளது. அக்கட்டிடத்தில் மூன்று வீடுகள் இருக்கின்றன. மேலே இரண்டு வீடுகளும் கீழொரு வீடும் இருக்கிறது.
மேலேயுள்ள இரண்டு வீடுகளின் ஒரு வீட்டில் ஓர் அழகிய பாவை வசிக்கிறாள். அளவான குடும்பம் தான். தாய் தந்தை மற்றும் அவள்.அவர்களது வீட்டுக்கதவு இரவு பத்தரை மணிவரை திறந்திருக்கும். மேலும் நாங்கள் எதிர்புறத்தில் கீழ் வீட்டில் வசிப்பதால் அவர்களது கதவு திறந்திருந்தால் இங்கு நன்றாகத் தெரியும்.
இப்போது என்ன பிரச்சினை என்றால் நான் இரவில் எங்கள் வீட்டு வெராண்டாவில் இங்குமங்கும் நடப்பது அவள் தந்தைக்கும் தாய்க்கும் என்மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலுமவள் நான் நடக்கும் போது அவர்களது ஹாலிலமர்ந்து கொண்டிருப்பது எரியும் தீயில் எண்ணெய்யையூற்றியுள்ளது. இப்போது அவர்கள் என்னை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர். காலை நான் எழுந்து வாசலுக்கு வந்தால் அவள் தந்தையின் முகத்தில் தான் விழிக்கிறேன்.
நேற்றும் இவ்வாறே ஆனது. அவரின் முகத்தில் விழித்த நேரமோ என்னவோ தெரியவில்லை நேற்று எங்கள் ச்சோக் பிட் நிரம்பிவிட்டது. அதை சரி செய்ய ஆளைப் பிடித்து சரி செய்து விடுவதற்குள் மதியம் மூன்றரை மணியானது. மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் செலவு.
அப்போது நான் அய்யனார் கோவில் பூதம் போல் ஒரு கையில் மமட்டி, மறுகையில் கடப்பாறை ஏந்தி நடந்து வந்தேன் அப்போது அவள் வெராண்டாவில் நின்று கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்த அந்நேரம் பார்த்து அவள் தந்தை வெளியே வந்து இங்கென்ன வேலை உள்ளே போ என அவளை அதற்றினார்.
இதை கேட்ட நான் அதிர்ந்து போய் பாத்ரூமில் சரணடைந்தேன். கை கால்களை லைஃப் பாய் சோப்பு கொண்டு அலம்பி, மமட்டி மற்றும் கடப்பாறையைக் கழுவி வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
சமையல் வாசனை கம கம வென இருந்தது. ஆனால் அது முன் வீட்டின் ஜன்னல் வழியாக வந்த வாசனை என்பதை விரைவில் அறிந்தேன்.
எனது கொழுப்பை கொல்ல என் அம்மா கொள்ளுப் பருப்பு செய்திருந்தார். நான் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தால் அவள் அம்மா அங்கு நின்று காவலிருந்தார். நான் கையில் டேபுடன் நாற்காலியைப் போட்டு வெராண்டாவில் அமர்ந்ததைக் கண்டு கோபமுற்று கதவை டமார் என சாத்திவிட்டார்.
அவர்கள் இருப்பது வாடகை வீடு என்பதால் கதவை அந்தப் போடு போடுகிறார். அடுத்தவன் முதலுக்கு தான் மனிதன் பங்கம் விளைவிப்பான்.
தனது பொருளாக இருந்தால் அதை பாதுகாப்பான் என்றெண்ணி நான் மொழிபெயர்க்கும் நாவலின் எழுத்துத் திருத்தங்களைச் செய்ய ஆரம்பித்தேன்.
என்னமோ நடக்குதே... எதற்கும் கவனமாக இருங்கள்...!
ReplyDeleteலிங்கில் சில பிரச்சனையிருந்தது இப்போது மகேஷின் உதவியால் அது சரி செய்யப்பட்டது.
Deleteநலமே விளையட்டும்....
ReplyDeleteதங்கள் அக்கறைக்கு நன்றி சார்
ReplyDeleteஅது எப்படி நவீன் அவங்க உங்களைப்போல ஒரு நல்லப்பிள்ளையை சந்தேகப்படலாம்? எனக்கு உள்ளம் கொதிக்குது. அதுனால நீங்க உண்மையாவே அவளை லவ் பண்ணி அடிவாங்குங்க. அப்போதான் இந்த பதிவு உலகமே உங்கள் வீரத்தை மெச்சும்.
ReplyDeleteஇது நல்லாயிருக்கு நல்ல உசுப்பேத்திவிடுற
Deleteஉடம்புல இருக்கக் கெட்டக்கொழுப்பைக் குறைக்க ஒரு வழிச் சொன்னேன். உடற்பயிர்ச்சி இல்லாமலே ஒரே தடவைல குறைக்கலாம். அடி உதவுவதைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டாங்க. அதான் அடிவாங்கிக் கொழுப்பைக் குறைங்க.
Deleteஇப்ப உடர்ப்பயிர்ச்சியால உங்க ஆர்ம்ஸ் உம் பைசெப்ஸ் உம் டெவெலப் ஆகுது போல. அதனால்தான் அந்த மயில் உங்கள் மீது மையல் கொண்டிருக்கு. ஜாக்கிரதை. கடமையில் கண்ணாக இருங்கள். வளர வேண்டிய திறமையும் சரி செய்யவேண்டிய கொழுப்பும் தான் உங்கள் இலக்குகள்.
ReplyDeleteஅப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.உடம்பு அப்படியே தான் இருக்கு..அரவிந்த்
Deleteநவீன் உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.
ReplyDeleteதுளசிதரன், கீதா
நன்றி துளசிதரன் சார்
Deleteநன்றி கீதா மேடம்
அப்போ பக்கத்து வீடு, இப்பொ எதிர்வீடு!! Enjoy Enjoy bro. " அவர்கள் இருப்பது வாடகை வீடு என்பதால் கதவை அந்தப் போடு போடுகிறார். அடுத்தவன் முதலுக்கு தான் மனிதன் பங்கம் விளைவிப்பான்.
ReplyDeleteதனது பொருளாக இருந்தால் அதை பாதுகாப்பான் என்றெண்ணி நான் மொழிபெயர்க்கும் நாவலின் எழுத்துத் திருத்தங்களைச் செய்ய ஆரம்பித்தேன்." Fantastic!
Thank you Fernando
Deleteஎன்னவோ நடக்குது... சுவாரஸ்யமாக இருங்கள்!
ReplyDeleteதங்கள் கருத்து புரியவில்லை சார்.மன்னிக்கவும்
Deleteஎல்லாவற்றுக்கும் பதட்டம் அடையாமல் சுவாரஸ்யமாய் வாழ்க்கையை அனுபவியுங்கள், டேக் இட் ஈஸி என்று சொல்ல வந்தேன்!
Deleteநன்றி சார்
Deleteபண்றதெல்லாம் பண்ணிப்புட்டு .. பின்னே சந்தேகம் வராம, சம்பந்தம்(!!) பேச தாம்பூலமா வரும்?.
ReplyDeleteஓ ..ஹோ ... கதை அப்படி போகிறதோ? 10வரை 8போடுவதன் உள்குத்து ரகசியம் இதுதானோ?ம்ம்ம்ம்…. நடக்கட்டும் நடக்கட்டும்….. மொழி பெயர்ப்புவேலையை சொன்னேன்..
தாம்பூலம் வந்தால் ஜாலி சார்...
Delete