Tuesday, 4 October 2022

திடீர் குருவாயூர் யாத்திரை

 வணக்கம் நண்பர்களே, 


       வலைதளம் பக்கம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் எழுத ஏதும் கிடைக்கவில்லை. அதே சோறு, தூக்கம், ஏக்கம், வேலை என ஸ்வரஸ்யமாக எதுவும் கிடைக்கவில்லை. 

      ஆனால் தற்போது ஒரு யாத்திரை மேற்கொண்டேன்  அதை குறித்து பகிர்கிறேன். 

      நேற்று அக்டோபர் 3,திங்கட்கிழமை திடீரென எந்த திட்டமிடலும் இல்லாமல் குருவாயூருக்கு கிளம்பி விட்டேன். அது சரி, திட்டமிட்டு கிளம்ப குடும்பமா  குட்டியா... தனிமரம் தனி சுகம். காலை ஏழு மணி அளவில் பையை தூக்கிக்கொண்டு பேருந்துக்கு சென்றேன். சுமார் ஏழரை மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 8:30மணிக்கு பாலக்காட்டில் இறங்கி அப்போதே திருச்சூர் பேருந்தில் ஏறினேன். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு திருச்சூரை 10:30 மணிக்கு அடைந்து பின் குருவாயூருக்கு போகும் பேருந்தில் ஏறி 11:30 மணியளவில் குருவாயூரை அடைந்தேன். அங்கே வேஷ்டி மற்றும் துண்டுக்கு மாறி, கோவிலில் வரிசையில்  நிற்கையில் மணி மதியம் 12:30. இரண்டு மணி நேர காத்திருப்பிக்கு பின் பிற்பகல் இரண்டரை மணிக்கு குருவாயூரப்பன் வராக மூர்த்தியாக தரிசித்து பின் வெளியே வந்தவுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4:30 மணிக்கு நடை திறப்பார்களாம். பல வண்ண வண்ணக் காட்சிகளைக் கண்ட வண்ணம், (சுவரோவியங்கள்) ஏனென்றால் நான் மிகவும் நல்லவன், நடந்து வெளியே வர ஒலிபெருக்கியில் இலவச மதிய உணவிற்கான அறிவிப்பு வந்தது. ஓசி சோற்றை விடுவேனா? புகுந்து விட்டேன். திருப்தியாக சாப்பிட்டு பின் வந்து பேருந்திலேறி திருச்சூரை அடைந்து அங்கிருக்கும் வடக்குநாதரையும், பரமேற்காவு பகவதியையும் தொழுதுவிட்டு பேருந்து நிலையம் வந்து பார்த்தால் திருச்சூரிலிருந்து உக்கடம் வரையிலான பேருந்து காத்துக் கொண்டிருந்தது. ஜாலியாக ஏறியமர்ந்தேன் 7:30 மணிக்கு. இரவு 10 மணிக்கு உக்கடம் வந்து சேர்ந்து பின் ஒரு உள்ளூர் பேருந்தில் ஏறி வீட்டை இரவு 11:00 மணிக்கு அடைந்தேன். இதில் நான் வியந்தது என்னவென்றால் எல்லாம் தகுந்த நேரத்தில் நடந்தது. மதியம் தரிசனம் செய்ய இயலாமல் போயிருந்தால் மாலை  4:30 மணிக்கு மேல் தான் தரிசனம் செய்திருக்கவியலும். பின் வடக்குநாதரை தரிசனம் செய்ய சமயமிருந்திருக்காது. என்னை யாத்திரை முழுவதிலும் பார்த்தசாரதியாய் வழிநடத்திய கண்ணன் எனது வாழ்க்கையையும் வழிநடத்துவான் என்பதில் சந்தேகமில்லை. நமது திட்டங்கள் பொய்த்துப் போகலாம் ஆனால்  இறைவனது திட்டம் என்றும் பொய்ப்பதில்லை என்பதை நேற்று உணர்ந்தேன். 


9 comments:

  1. உண்ணுடைய ஏக்கம்; சீக்கிரமே அந்த கண்ணன் புறிந்து கொண்டு உனக்கு வேண்டியதை அருள் புரிவாராக்அ:)))

    ReplyDelete
  2. இறைவன் தங்களுக்கு என்றும் நல்ல பாதையை அமைக்கப்படும்.

    ReplyDelete
  3. அன்பே சிவம்

    ReplyDelete
  4. திருச்சூரில் திருவம்பாடி கண்ணனையும் தரிசித்திருக்கலாம். பரமேக்காவில் இருந்து 10 நிமிடம் தூரம் தான் (ஆட்டோவில்).
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி சார். அடுத்த முறை தவறாமல் சேவிக்கிறேன்.

      Delete
  5. நவீன் ஆமாம் ரொம்ப வருஷம் ஆச்சு இல்ல??!!! மீண்டும் வந்தது சந்தோஷம்.

    நல்ல பயணம்னு தெரிகிறது. எனக்கும் தனியே செல்ல ரொம்பப் பிடிக்கும். சில சமயம் அமைந்ததுண்டு. தனியா போனா நீங்க சொல்லிருப்பது போல் எந்தத் திட்டமும் வேண்டாம் பாருங்க.

    குருவாயூரப்பன், வடக்குநாதர், பரமேற்காவு பகவதி...எல்லாரும் நலமாக இருப்பார்கள்!!!!! நான் கண்டு 6 வருஷமாச்சு...ஜெகெசி அண்ணா சொல்லிருப்பது போல் திருவம்பாடி - உங்கள் கண்ணனையும் கண்டிருக்கலாமோ...ஆனால் நேரம் இதற்கே சரியாக இருந்திருக்கிறதே..ஒரு நாள் பயணம்..

    குருவாயூரில் இலவச மதிய உணவு அருமையாக இருக்கும்.

    உங்கள் எல்லா எண்ணங்களும் ஈடேற இறைவன் அருள்புரியட்டும்

    கீதா

    ReplyDelete