Wednesday, 17 June 2020

'துர்கா மாதா' மொழிபெயர்ப்பு


வணக்கம் நண்பர்களே,

                நான் ஊரடங்கு காலத்தில் ஒரு நாவலை மொழிபெயர்க்க நேர்ந்தது. இது ஊரடங்கிற்கான திட்டமிடல் கூட இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் நண்பர் திருப்பதி மகேஷுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன்.


    அப்போது அவர் தான் படித்த நாவல்களைப் பற்றிப் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது மகேஷ் 'துர்கா மாதா' என்ற தமிழ் நாவலைப் பற்றிச் சொன்னார். மேலும் அதனுடைய ஆங்கில வடிவத்தைக் காணவும் தான் ஆவலாகவுள்ளதாகக் கூறினார்.


      என்னை அதை மொழிப்பெயர்க்கவும் பரித்துரைத்தார். நானும் அதை ஏற்றுக்கொண்டதின் பெயரில் மகேஷ் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
இவ்விடத்தில் மகேஷை பாராட்டியே ஆகவேண்டும்.

    மொழிபெயர்ப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்.குறிப்பாக அத்தமிழ் நாவல் என் கைகளில் கிடைக்கவும், அந்த எழுத்தாளருடன் நான் தொடர்பு கொள்ளவும் நிறைய உதவி செய்தார்.

    மார்ச் 16 ம் தேதி எனக்கு நாவல் கிட்டியது. சில நாட்கள் கழித்து எனது வேலையைத் தொடங்கினேன்.  

       அன்று மார்ச் 21, துர்கா மாதா நாவலின் முதல் பக்கத்தைப் படித்து அதை மொழிப்பெயர்த்து மாதிரி பிரதியை எழுத்தாளருக்கு காண்பிக்குமாறு மகேஷுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.
மகேஷ் அதை அவர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றார்.

     ஒப்புதல் கிடைத்த பிறகு மொழிபெயர்ப்பை தொடர்ந்தேன். நான் ஆரம்பித்த அதே நேரம் ஊரடங்குக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நீடிக்க நீடிக்க நானும் நிறைய நேரம் நாவலை மொழிபெயர்க்க செலவிட்டேன்.

   தினமும் ஒரு அத்தியாயம் என்ற கணக்கில் மொழிப்பெயர்க்க திட்டமிட்டேன். அவ்வப்பொழுது சந்தேகம் ஏற்பட்டால் எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்பேன். ஒரு நாவலை மொழிப்பெயர்க்கும் போது அந்த நாவலின் எழுத்தாளருடன்,அதாவது அந்த சிந்தனைக்கு உரிமையானவருடன் தொடர்பிலிருப்பது நல்லதொரு மொழிபெயர்ப்பைத் தரும். காரணம் மொழிபெயர்ப்பவர் எக்காரணம் கொண்டும் தன் கருத்துக்களை அதில் புகுத்தக் கூடாது. எழுத்தாளரின் எண்ணத்தை அப்படியே வேறு மொழியில் எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

    ஆகவே, மகேஷ் செய்த உதவி தான் இந்த வெற்றிக்கு மூலகாரணம். எழுத்தாளர் ஜீவாவின் மின்னஞ்சலையும், அலைபேசி எண்ணையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

      எனது நன்றி கலந்த அன்பை மகேஷுக்கு தெரிவிக்கிறேன்.

     அடுத்து, நான் நன்றி கூற வேண்டியது தகவல் தொழில்நுட்பத்திற்கு தான் 

     நான் இருப்பது கோவையில், மகேஷ் இருப்பதோ திருப்பதியில், எழுத்தாளர் ஜீவா வசிப்பதோ நாகர்கோவிலில். தூரங்களைப் பொருட்படுத்தாது சிந்தனைகளை இணைக்க உதவிய இணையத்திற்கு நன்றி.

    எழுத்தாளர் ஜீவா அவர்கள் நான் அழைக்கும் போதெல்லாம் சலிக்காமல் எனது சந்தேகங்களைப் போக்கி ஒரு நல்ல மொழிப்பெயர்ப்பு வெளிவர உதவியுள்ளார். அவர்களுக்கு நன்றி.

     திருப்பூர் குணா அவர்களுக்கு எனது நன்றிகள், புத்தகம் என்னை அடைந்து விட்டது என்பதை உறுதி செய்ய அழைத்து அக்கறையுடன் விசாரித்தார்.

  புத்தகத்தை என்னிடம்  பத்திரமாக,பவ்யமாக ஒப்படைத்த    கொரியர் மேன் நடராஜுக்கும் எனது நன்றிகள்.

     துர்கா மாதாவின் மொழிபெயர்ப்பை வாசித்து கருத்துக்கூறிய அரவிந்த்,நவரசன் மற்றும் இதர நண்பர்களுக்கும் நன்றி.
  
       புத்தகமானது எழுத்தாளர் ஜீவாவால் அமேசான் தளத்தில் மின்நூலாக(E- book) வெளியிடப்பட்டது.

                                       
             
                                       DURGA MAATHA:The protector of social justice

  இதில் எனது பெயரை பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.  அனைவரும் எனது இந்த முதல் மொழிபெயர்ப்பை படித்துக் கருத்துக் கூறுங்கள் நண்பர்களே.

      மடசாம்பிராணி நவீன் எப்போதும் இணையத்தில் தங்கள் மேலான கருத்துக்களுக்காக காத்திருப்பான். 



16 comments:

  1. ஆஹா.... மகிழ்ச்சி நண்பரே.... இணையத்தில் இரண்டு நூல்களையும் வாசிக்கிறேன்.

    உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பிரம்மிப்பாக இருக்கிறது நவீன். வாழ்த்துக்கள். சாதனை செய்துவிட்டு சாதாரணமாக இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அபி, நீ உசுப்பேத்தி விட்டே ஆள முடிச்சிடுவ.நன்றி அபி.

      Delete
  3. Replies
    1. நன்றி சார்...ஏதோ நடந்து கொண்டு தான் இருக்கிறது நண்பரே...கவனமாக இருக்கிறேன்

      Delete
  4. ஹலோ நவீன் என்னது நீங்களா மடசாம்பிராணி?!!! இத்தனை அழகான செயலைச் செய்துவிட்டு இப்படி எல்லாம் சொல்லக் கூடாது. இந்த சின்ன வயசுல வெகு விரைவில் மொழி பெயர்த்திருக்கீங்க நவீன். வியப்பு மேலிடுகிறது. பாராட்டுகள்.

    ஆமாம் மகேஷுக்கு நன்றி சொல்லணும். எ குட் கோஆர்டினேட்டர்.

    //ஒரு நாவலை மொழிப்பெயர்க்கும் போது அந்த நாவலின் எழுத்தாளருடன்,அதாவது அந்த சிந்தனைக்கு உரிமையானவருடன் தொடர்பிலிருப்பது நல்லதொரு மொழிபெயர்ப்பைத் தரும். காரணம் மொழிபெயர்ப்பவர் எக்காரணம் கொண்டும் தன் கருத்துக்களை அதில் புகுத்தக் கூடாது. எழுத்தாளரின் எண்ணத்தை அப்படியே வேறு மொழியில் எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.//

    நச்! ரொம்ப சரி.

    உங்கள் மொழிபெயர்ப்புப் புத்தகம் அமேசானில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் நவீன். பாராட்டுகள்! துளசி இன்று கொஞ்சம் பிஸி. அவருக்கும் சொல்லிவிடுகிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மேடம் என்னை யாராவது பாராட்டினா எனக்கு மதம் பிடிக்கும்.அதனால் தான் அப்பப்போ இந்த மாதிரி கால் தரையில் நிக்காத உணர்ற மாதிரி நாலு வார்த்தை மாத்திரை போட்டுகொண்டு வேண்டியுள்ளது..பாவம் BP patient, sugar patient போல மதம் patient நான். அப்பப்ப மாத்திரை போட்டுக்கணும்

      Delete
  5. அவையடக்கம் உங்களை நீங்களே மடசாம்பிராணி என்று சொல்லிக்கொள்ள வைக்கிறது் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். அடக்கம் அமரருள் உய்க்கும் அல்லவா சார்.

      Delete
  6. அடடே என பாராட்டும் வகையில் சாதித்துவிட்டு மட சாம்பிராணி என்பதெல்லாம், too.....much, ரொம்ப….. நல்லவர்போல் ரொம்ப…. அடக்கஒடுக்கமா?

    எந்த சம்பிராணியும் நறுமணத்தையே கொடுக்கும்.

    நீங்கள் மட சாம்பிராணி அல்ல, "சந்தன திட சாம்பிராணி".

    வாழ்த்துக்கள் நவீன்.

    ReplyDelete
    Replies
    1. சார் நான் சாமியார் மடத்த மீன் பண்ணினேன். சாமியார் படத்தில் எறியும் சாம்பிராணி புகை போல எப்போதும் இணையத்தில் இணைத்திருப்பேன் என்பதற்காக

      Delete